ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரணம்... உதவியாளர், பாதுகாவலரிடம் சிபிஐ விசாரணை

Google Oneindia Tamil News

பெங்களூரு: தற்கொலை செய்து கொண்ட கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் தனி உதவியாளர், பாதுகாவலர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் ரவி. அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருப்பினும் இதற்கு என்ன காரணம் என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

DK Ravi probe: CBI questions PA, gunman

இந்த நிலையில் சிபிஐ தற்போது ரவியின் பி.ஏ. மற்றும் பாதுகாவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. சம்பவத்தன்று அலுவலகத்திலிருந்து ரவி கிளம்பிச் செல்வதற்கு முன்பு யாருடன் பேசினார் என்பது குறித்து பிஏவிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு அவர், ரவி அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரமே இருந்தார் என்றும் உடனடியாக கிளம்பிப் போய் விட்டதாகவும் கூறியுள்ளார்.

யாரும் சந்திக்கவில்லை

மேலும் தனது மரணத்திற்கு முன்பு ரவி யாரையும் சந்திக்கவில்லை என்றும் சிபிஐ நம்புகிறது. அதேசமயம், ரவி எந்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்தார் என்பதை தன்னால் சரியாக கணிக்க முடியவில்லை என்று பிஏ கூறியுள்ளார்.

இதேபோவே பாதுகாவலருடம் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதேசமயம், ரவியை யாராவது பின் தொடர்ந்து வந்தார்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் பாதுகாவலர்.

இந்த வழக்கில் இன்னும் முக்கிய திருப்பம் ஏற்படவில்லை என்றும் விசாரணை தொடர்வதாகவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும் மேலும் சந்தேகம் அதிகரித்துகா் கொண்டே போவதாகவம் அவர்கள் கூறியுள்ளனர்.

கோலாரில் ரவியுடன் வேலை பார்த்த சிலரையும் கூட சிபிஐ விசாரித்துள்ளது. கோலாரில் அவர் கலெக்டராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 3 கோணத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறதாம். தனிப்பட்ட காரணம் ஏதாவது உள்ளதா, சொத்துப் பிரச்சினை ஏதும் இருந்ததா, அவருக்குக் கொலை மிரட்டல் ஏதேனும் இருந்ததா என்று சிபிஐ விசாரித்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X