For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேபினட் விரிவாக்கம்: ட்ரிம் செய்த தாடியுடன் சீரியஸாக இருந்த மோடி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: தனது காலில் விழுந்து ஆசி வாங்காமல் கை குலுக்குமாறு மோடி தனது ஆதராவளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி முதன்முறையாக தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவுபடுத்தினார். 4 கேபினட், 17 இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 21 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அதில் சிவசேனாவின் சுரேஷ் பிரபு கட்சியால் பரிந்துரைக்கப்படாதவர். மேலும் அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்கும் முன்பு சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் பதவியேற்பு விழாவின்போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்,

மோடி

மோடி

பிரதமர் மோடி ட்ரிம் செய்த தாடியுடன் முகத்தை மிகவும் சீரியஸாக வைத்திருந்தார்.

இந்தி

இந்தி

21 பேரில் 19 அமைச்சர்கள் இந்தியில் பதவியேற்றுக் கொண்டனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பதவியேற்றார்கள்.

தொடாதீர்கள்

தொடாதீர்கள்

மோடியை பார்த்த அவரது ஆதரவாளர்கள் அவரின் காலை தொட்டு ஆசி பெற்றனர். அதற்கு மோடி என் காலில் விழாதீர்கள், கை குலுக்குங்கள் போதும் என்றார்.

அத்வானி

அத்வானி

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு முதல் வரிசையில் அமித் ஷா அருகே இருக்கை அளிக்கப்பட்டது.

அமித் ஷா

அமித் ஷா

பதவியேற்பு விழா நடந்த தர்பார் ஹாலுக்கு மோடி வரும் முன்பு அனைவரின் கண்களும் பாஜக தலைவர் அமித் ஷா மீது தான். அமைச்சர்களாக பதவியேற்கவிருந்தவர்கள், விருந்தினர்கள், ராஷ்ட்ரபதி பவன் ஊழியர்கள் என்று பலரும் வந்து வந்து அமித் ஷாவிடம் பேசினர்.

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மும்பையில் ஏதோ வேலை இருந்ததால் அவர் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.

English summary
PM Modi has requested his admirers not to touch his feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X