For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘புன்னகை மன்னன்’ கமல், ரேகா போல் தற்கொலை செய்து கொள்கின்றனவா டால்பின்களும்?

Google Oneindia Tamil News

டெல்லி: சில நேரங்களில் கடலோரமாக டால்பின்களும், திமிங்கலங்களும் தாங்களாகவே கரை ஒதுங்குவதைக் காணலாம். இது தற்கொலை செய்யும் நோக்கில் அவை செயல்படுகின்றனவவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் அவற்றின் தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை இந்த மர்மத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சில நேரங்களில் டால்பின்களும், திமிங்கலங்களும் வேண்டும் என்றே கடலை விட்டு கரையை நோக்கி ஜோடியாக வந்து விடுகின்றன. அதன் மூலம் அவை மரணத்தைத் தழுவுகின்றன.

காரணம் தெரியவில்லை...

காரணம் தெரியவில்லை...

இது அனைத்து பகுதிகளிலும் காணப்படும் நிகழ்வாக உள்ளது. இதற்கான காரணம் தான் இதுவரை சரிவர கண்டுபிடிக்கப்படவில்லை. சமீபத்தில் கலாய்ஸ் கடற்கரையில் 10 திமிங்கலங்கள் ஒன்றாக கரை ஒதுங்கின. இதில் 7 உயிரிழந்தன.

ஆல்கை பெருக்கம்...

ஆல்கை பெருக்கம்...

கடலில் அபாயகரமான ஆல்கை பெருக்கம் காரணமாகவும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. மேலும் நோய் காரணமாகவும் அவை தாங்களாகவே கரை ஒதுங்கி மரணத்தைத் தழுவுவதாகவும் கூறப்படுகிறது.

நோய் காரணமாக...

நோய் காரணமாக...

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் 1987 மற்றும் 88 ஆகிய ஆண்டுகளில் நோய் காரணமாக ஏராளமான டால்பின்கள் கரை ஒதுங்கி உயிரிழந்தன என்பது நினைவிருக்கலாம்.

காயம் காரணமாகவும்...

காயம் காரணமாகவும்...

சில சமயங்களில் கடற்படையினரின் கப்பல்கள் எழுப்பும் சோனார் ஒலி காரணமாக இந்த விலங்குகள் கரை ஒதுங்குவதாகவும் கூறப்படுகிறது. தப்பி ஓடும்போது காயமடைந்தும் இவை கரை ஒதுங்குகின்றனவாம்.

விலங்காத மர்மம்...

விலங்காத மர்மம்...

இருப்பினும் காயம், நோய் காரணமாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விளங்குகளும் கூட அதிக அளவில் கூட்டமாகக் கரை ஒதுங்குவதுதான் மர்மமாக உள்ளதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நிச்சயமா அது தான்...

நிச்சயமா அது தான்...

இவை தாங்களே மரணத்தைத் தழுவும் நோக்குடன் கரைக்கு வருவதாக சந்தேகப்படுகிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியென்றால் இது நிச்சயம் தற்கொலை முயற்சி தான் என்பது அவர்களது வாதமாகும்.

English summary
We simply don’t know why some apparently healthy whales and dolphins strand themselves. Which begs the question: are they doing it deliberately?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X