For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவு புகார்: பி.எஸ்.எப். வீரரின் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்துவது யார் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வீடியோ வெளிட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரின் ஃபேஸ்புக் கணக்கை அவரது மனைவி தான் பயன்படுத்தி வருகிறார்.

கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்பவர் இது குறித்த வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு பிரதமர் மோடி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Do you know who operates BSF Jawan Tej Bahadur's FB account?

இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேஜ் பகதூரின் குற்றச்சாட்டை எல்லை பாதுகாப்பு படை மறுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே தேஜ் பகதூரின் ஃபேஸ்புக் கணக்கு போலியானது என்ற தகவல் வெளியானது. இதை அறிந்த அவரின் மனைவி தேஜ் பகதூரின் ஃபேஸ்புக் கணக்கை நான் தான் பயன்படுத்துகிறேன் அது போலி இல்லை என ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

English summary
BSF jawan Tej Bahandur Yadav's facebook account is not fake but it is operated by his wife. He accused BSF officials of serving them poor quality food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X