For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: கர்ப்பிணி முஸ்லீம் பெண் என்பதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, டாக்டர்கள் கூறியதாகவும், இந்த நிலையில், அந்த பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாகவும், ராஜஸ்தானில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. கர்ப்பிணிப் பெண், மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டதும், ஆம்புலன்சிற்குள் வைத்தே பிரசவிக்கும் நிலை ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த பெண் உயிர்பிழைத்தார். ஆனால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Doctor refuses to admit pregnant woman because she is a Muslim, in Rajasthan

அந்த பெண்ணின் கணவர் இர்பான் கான் அளித்த பேட்டியில், "என் கர்ப்பிணி மனைவி குழந்தையை பிரசவிக்கும் சூழல் ஏற்பட்டது. பேறுகால வலி ஏற்பட்டதும், அவர் சிக்ரியிலிருந்து மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஜனனா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் இங்குள்ள மருத்துவர்கள் நாங்கள் முஸ்லீம் என்பதால் ஜெய்ப்பூருக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டனர். நான் அவரை, ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போது, ​​அவர் பிரசவித்தார். ஆனால், குழந்தை இறந்துவிட்டது. எனது குழந்தையின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகம்தான் காரணம்." என்று இர்பான் கான் குற்றம்சாட்டினார்.

கொரோனா வைரஸ்.. டெல்லியில் மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை கொரோனா வைரஸ்.. டெல்லியில் மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

"ஒரு பெண் பிரசவத்திற்காக வந்திருந்தார், ஆனால் ஆபத்தான நிலையில் இருந்தார். எனவே மேல் சிகிச்சைக்காக அவர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதில் மதம் விஷயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்" என்று ஜனனா மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ரூபேந்திர ஜா கூறியுள்ளார்.

அதேநேரம், ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சர் விஸ்வேந்திர சிங், முஸ்லீம் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்ததைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.

விஸ்வேந்திர சிங் தனது ட்வீட்டில், "கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணுக்கு பாரத்பூரில் உள்ள ஜெனானா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது, மேலும் அவரது மதத்தின் அடிப்படையில் ஜெய்ப்பூருக்கு செல்லும்படி கூறப்பட்டது. பாரத்பூர் எம்.எல்.ஏதான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், இதுதான் பரத்பூர் மருத்துவமனையின் நிலை. இது வெட்கக்கேடானது. இதை விட வெட்கக்கேடானது எதுவும் இருக்க முடியாது. இது ஒரு மதச்சார்பற்ற நாடு, இதுபோன்ற விஷயங்களில் அரசு மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

"தப்லிகி ஜமாஅத் கூட்டம் நிச்சயமாக முழு நாட்டிற்கும் ஆபத்தானது. இருப்பினும், பாரத்பூர் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவர்கள் கையாண்ட விதத்தில் மற்ற இஸ்லாமிய மக்களை யாரும் மோசமாக கையாண்டுவிட முடியாது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது வழக்கு

    இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஸ்வேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A government hospital in Rajasthan's Bharatpur district has come under the scanner for allegedly citing the religion of a pregnant Muslim woman as grounds for refusing to admit her at the hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X