For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து சரியும் பணமதிப்பு.. வெனிசுலாவின் ''இருண்ட காலம்'' போல மாறுகிறதா இந்திய பொருளாதாரம்!

வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள பண வீக்கம் போலவே இந்தியாவிலும் விரைவில் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள பண வீக்கம் போலவே இந்தியாவிலும் விரைவில் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் பண மதிப்பு தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

வெனிசுலாவில்தான் மோசமான பணவீக்கம் உலகிலேயே நிலவுகிறது. அங்கு டாலருக்கு நிகரான பணமதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

இதனால் அங்கு புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பிலான பணங்களை செல்லாது என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவிக்க இருக்கிறார். அதேபோல்தான் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது. தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது.

வெனிசுலா நிலை

வெனிசுலா நிலை

வெனிசுலா தற்போது மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. அந்நாட்டின் பணவீக்கம் தற்போது 10 லட்சம் சதவிகிதத்தை தாண்டி இருக்கிறது. உலகிலேயே தற்போது அதிக பண வீக்கம் கொண்ட நாடு வெனிசூலாதான். இதனால் அந்த நாட்டு மக்கள் எவ்வளவு அதிகம் சம்பாதித்தாலும் எதையும் வாங்க முடியாத நிலைக்கு சென்று இருக்கிறார்கள்.

வரிவிதிப்பு

வரிவிதிப்பு

வெனிசுலாவில் முதலில் பெரிய பிரச்சனையாக மாறியது அந்நாட்டு வரிவிதிப்பு முறைதான். திடீர் என்று அந்த நாட்டில் ஒற்றை வரிவிதிப்பு முறை விதிக்கப்பட்டது. அதேபோல் மிகவும் அதிக அளவில் அடிப்படை வரி விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய 96 சதவிகித நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது.

அதிக அளவிலான பணம்

அதிக அளவிலான பணம்

இதனால் பண இழப்பை கட்டுப்படுத்த, அதிக மதிப்பில் 10,000 ரூபாய் வரை கூட அந்நாட்டில் பணம் புழக்கத்திற்கு வந்தது. இதனால் பண வீக்கம் அதிகம் ஆனது. எந்த அளவிற்கு அதிகமானது என்றால் பொலிவர்ஸ் எனப்படும் வெனிசூலா பணத்தை வைத்து எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு பர்கர் 10 லட்சம் பொலிவருக்கு விற்றது.

அதேபோல் நடக்கிறது

அதேபோல் நடக்கிறது

இந்த நிலையில் வெனிசுலாவில் நடந்த அதே சம்பவங்கள் இங்கும் நடக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு என்று இந்தியா முழுக்க வரிவிதிக்கும் முறை உருவாக்கப்பட்டது. இது சில வகைகளில் நன்மைகளை வழங்கி இருந்தாலும் பல வகைகளில் மக்களுக்கு பண விரயத்தை அளித்துள்ளது. ஜிஎஸ்டி மோசமாக அமல்படுத்தப்பட்டுள்ளது, என்று முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் தெரிவித்திருந்தார்.

அதிக மதிப்புள்ள பணம்

அதிக மதிப்புள்ள பணம்

வெனிசுலாவில் 10000 பொலிவர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது போல இந்தியாவிலும் அதிக மதிப்பிலான பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், இந்தியாவின் பண வீக்கம் தொடர்ச்சியாக அதிகமாகிக் கொண்டே செல்கிறது. முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

விலைவாசி உயரும்

விலைவாசி உயரும்

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் வெனிசுலாவில் ஏற்பட்டது போல இந்தியாவிலும் பொருட்களின் விலை அதிகம் ஆகும். காய்கறி, உணவுப்பொருட்களின் விலை இன்னும் சில நாட்களில் உச்சத்தை தொடும். வெனிசுலாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொடக்க கால பாதிப்புகள் இந்தியாவில் இப்போது ஏற்பட தொடங்கியுள்ளது.

English summary
Venezuela Inflation strikes 1 billion percentage. It is defined as the worst in the world. Now India's rupees gets its lowest to the dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X