போர் பதற்றம்: சீனத் தயாரிப்பு அனைத்தையும் கைவிடுங்க.. மும்பை பள்ளிகள் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: எல்லையில் அடாவடி செய்து வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை புறக்கணியுங்கள் என்று மும்பை பள்ளிகளின் முதல்வர் சங்கம் அறிவுறுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின்ன் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமி பூடானுக்கு சொந்தமானது. இருப்பினும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது. இதனால் டோக்லாம் பகுதியில் சீனா சாலை போடும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

பூடான் விஷயத்தில் இந்தியா தலையிட கூடாது என்று சீனா அடாவடித்தனம் செய்கிறது. டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்தால் வடகிழக்கு மாநிலங்களையும் நாட்டையும் இணைக்கும் சிலிகுரி பிராந்தியத்துக்கு எப்போது வேண்டுமானாலும் பேராபத்து ஏற்படும். இதனால் நமது ராணுவம் கடுமை காட்டுகிறது.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் சீனாவின் கொட்டத்தை அடக்க தங்களால் இயன்றதை செய்யவேண்டும் என்ற தேசப்பற்று இந்தியர்களிடையே தற்போது பீறிட்டு எழுந்துள்ளது. மும்பையில் உள்ள பள்ளிகளில் சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் எழுது பொருள்கள் உள்ளிட்டவைகளை வாங்காமல் புறக்கணியுங்கள் என்று பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளது.

 மும்பை முதல்வர்கள் சங்கம்

மும்பை முதல்வர்கள் சங்கம்

சீனாவில் தயாரிக்கும் பொருள்களான பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ், ஸ்கெட்ச் பேனாக்கள் உள்ளிட்டவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கவர்ச்சியாக உள்ளதால் இந்த பொருள்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த பொருள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்த மும்பை முதல்வர்கள் சங்கங்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளன.

 நம் பணம் ஏன் அந்நாட்டுக்கு...

நம் பணம் ஏன் அந்நாட்டுக்கு...

இதுகுறித்து மும்பை முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாந்த் தெரிவிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாம் நிரந்தர உறுப்பினராக ஆரம்பத்திலிருந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது சீனாதான். ஜம்மு- காஷ்மீர் பிரச்சினையை இந்தியா சந்தித்து வரும் நிலையில் வேண்டுமென்றே சிக்கிம் எல்லையில் பிரச்சினையை கிளப்பி குடைச்சல் கொடுக்கிறது. சீன ஊடகங்களும் அந்நாட்டு மக்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடுகின்றன. இந்த சூழலில் நம் பணத்தை நாம் ஏன் அந்நாட்டுக்கு தர வேண்டும்.

 பிரச்சினை அதிகரிக்காது

பிரச்சினை அதிகரிக்காது

சீன பொருள்களை புறக்கணிப்பதால் எல்லையில் பதற்றம் அதிகரிக்காது. இது ஒன்றும் அரசியல் ஸ்டன்ட் அல்ல. ஆனால் தேசபக்திக்கான நடவடிக்கை. சீனாவுக்கு நாம் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the border standoff between India and China continues, many schools in Mumbai plan to tell students to boycott Chinese-made school stationery and other products.
Please Wait while comments are loading...