For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசு மாட்டுக்கறி சாப்பிட்டா "சுகர்" வருமா..??

Google Oneindia Tamil News

ஆஜ்மீர்: பசுவைக் கொன்று சாப்பிடாதீர்கள். அது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமல்லாமல், சர்க்கரை வியாதிக்கும் வித்திடும். எனவே அதைத் தவிருங்கள் என்று ஆஜ்மீர் தர்காவின் தலைவரான சையத் ஜைனுல் ஆபிதின் கூறியுள்ளார்.

இதுகுறித்து சையத் ஜைனுல் ஆபிதின் கூறுகையில் முஸ்லீ்ம்கள் மாட்டுக் கறியை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் இவரை ஆஜ்மீர் தர்காவின் தலைமைப் பொறுப்பிலிருந்து அவரது சகோதரர் சையத் அலாதின் அலிமி நீக்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பசு வதை

பசு வதை

பசு வதை குறித்து ஜைனுல் ஆபிதின் கூறுகையில், பசு மாட்டுக் கறியை சாப்பிடாதீர்கள். அது இந்துக்களின் உண்வுகளை புண்படுத்துவது மட்டுமல்ல. மாறாக சர்க்கரை வியாதிக்கும் வித்திடுகிறது.

முழுமையாக நிறுத்துங்கள்

முழுமையாக நிறுத்துங்கள்

பசு மாட்டுக் கறியை சாப்பிடுவதை முஸ்லீம்கள் முழுமையாக நிறுத்த வேண்டும். இந்துக்களின் எண்ணங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு எதிர்ப்பு அதிகம்

எனக்கு எதிர்ப்பு அதிகம்

நான் வெளிப்படையாக பேசுபவன். இதனால் தீவிரப் போக்கு கொண்டவர்கள் எனக்கு எதிராகவே இருப்பார்கள். இப்போது என்னை நீக்கியதாக வந்த செய்தியும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.

பதவி நீக்கம் செய்ய முடியாது

பதவி நீக்கம் செய்ய முடியாது

நான் மனதில் பட்டதைச் சொல்பவன். இதனால்தான் எதிர்ப்புகள் வருகின்றன. என்னை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டே எனக்கு சாதகமாக 1987ம் ஆண்டே தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து எனது மனதுக்கு சரி என்று படுவதைப் பேசுவேன் என்று கூறியுள்ளார் ஆபிதின்.

English summary
Ajmer dargah chief Syed Zainul Abedin has asked the Muslims not to eat cow meat. "It hurts sentiments and causes diabetes", he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X