For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மமதாவிடம் மோதாதீர்கள்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்.. மோடியை எச்சரிக்கும் மாயாவதி!

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட்டதற்கு எதிராக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட்டதற்கு எதிராக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜிக்கு ஆதரவாக மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் நேற்று முதல்நாள் கலவரம் ஏற்பட்டது. இதை அடுத்து, தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்தது.

இந்த தேர்தல் பிரச்சார தடை இன்றோடு அமலுக்கு வருகிறது. இன்று இரவு 10 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் தடைக்கு வருகிறது.

சட்டை கலையாமல் கமல்ஹாசனை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.. சொல்கிறார் தமிழிசை! சட்டை கலையாமல் கமல்ஹாசனை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.. சொல்கிறார் தமிழிசை!

மாயாவதி பேட்டி

மாயாவதி பேட்டி

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேட்டி அளித்துள்ளார். அதில் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தை தடை செய்தது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை சுத்தமாக என்னால் ஏற்க முடியாது. பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்றால் உடனடியாக தடை செய்யலாமே. ஏன் ஒரு நாள் அவகாசம்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

மோடிக்கு ஆதரவாக செயல்பட ஆசைப்பட்டு தேர்தல் ஆணையம் இப்படி செய்கிறதா. தேர்தல் ஆணையம் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கு எல்லாம் விரைவில் முடிவு கட்டப்படும்.

வேண்டாம் மோடி

வேண்டாம் மோடி

மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து கொண்டு மமதா பானர்ஜியை தொடர்ந்து குறி வைத்து தாக்குகிறார்கள். இது திட்டமிட்டு நடப்பது எல்லோருக்கும் தெரியும். மோடியும், அமித் ஷாவும் தோல்வி அடைவது உறுதியாகி விட்டது. அந்த தோல்வி பயத்தில் இவர்கள் இருவரும் இப்படி செய்கிறார்கள்.

மமதா எப்படி

மமதா எப்படி

மமதாவை இவர்கள் இப்படி திட்டமிட்டு குறி வைப்பது ஆபத்தான விஷயம். இது மிக மோசமான டிரெண்ட். இப்படியே இவர்கள் செயல்பட்டால் மிக மோசமான விளைவுகளை இவர்கள் சந்திக்க நேரிடும். பிரதமர் மோடியின் பதவிக்கு இது அழகு கிடையாது. இதற்கான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள போகிறார்கள், என்று கூறியுள்ளார்.

English summary
Don't ever mess with her again dear Modi, says, Mayawati backs Mamata Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X