For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெஸ்டாரண்டுகளில் சேவை பிடிக்கவில்லையா..?, சேவை கட்டணம் செலுத்த வேண்டாம்!

நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டும் சேவை கட்டணத்தை செலுத்தினால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஹோட்டல்களில் சேவை பிடிக்கவில்லை என்றால் சேவை கட்டணம் கட்ட வேண்டாம் என்று மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ரெஸ்டாரண்டுகள் 5 முதல் 20 சதவீதம் வரையில் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றன. இதை வலுக்கட்டாயமான டிப்ஸ் போல வாடிக்கையாளர்களிடமிருந்து அவை பெறுவதாக புகார்கள் எழுந்தன.

Don't like service at restaurants: Now refuse to pay service fee

இந்த நிலையில் நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டும் சேவை கட்டணத்தை செலுத்தினால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹோட்டல்கள், சேவை துறைசார்ந்த தொழில்நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த மாநில அரசு கேட்டுக்கொள்ளப்ப்ட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை, ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் வாடிக்கையாளர்கள் கண்களுக்கு படும் வகையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Unhappy with the service at restaurants? You can now refuse to pay the service fee that is charged on your bill. The government says that the service charge which ranges between 5 to 20 per cent and is added to bill instead of tips cannot be mandatorily applied by restaurants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X