For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளிதழ்களில் இன்று: ‘பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்? - கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ

By BBC News தமிழ்
|

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்?"

பா.ஜ.க
BBC
பா.ஜ.க

கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பிரதேச குணா தொகுதி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பன்னலால் ஷாக்யா (62), 'சமீபத்தில் என்னிடம் ஒரு பத்திரிகையாளர், மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் இப்போது உயர்ந்துவிட்டன என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், "ஏன் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்? பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இல்லை என்றால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இருக்காது. ஆண்களுக்கும் பெண் நண்பர்கள் இருக்கக் கூடாது என்று கூறியதாக ஷாக்யா பேசினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்.


தி இந்து (தமிழ்) - ஷேர் ஆட்டோ கிணற்றில் விழுந்து 10 பேர் பலி

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் நேற்று மாலை அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ சாலையோர தரை கிணற்றில் நிலை தடுமாறி விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர் என்கிறது தி இந்து (தமிழ்) செய்தி. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் முப்கால் பகுதியில் இருந்து மெண்டோரா பகுதிக்கு 19 பேர் நேற்று மதியம் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அதிவேகமாகச் சென்ற ஆட்டோ, மெண்டோரா அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, சாலை ஓரத்தில் இருந்த தரைக்கிணற்றுக்குள் நிலை தடுமாறி விழுந்தது.இந்த விபத்தில் 5 பெண்கள், 5 சிறுவர்கள் என 10 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 9 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

வங்கி மோசடி:


தி இந்து (ஆங்கிலம்) - வகுப்புவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை

திராவிட முன்னேற்ற கழக ஈரோடு மண்டல மாநாட்டில் உரை நிகழ்த்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ். எதிர்ப்பு குரல்களை அடக்க பணத்தையும், அதிகாரத்தையும் பா.ஜ.க பயன்படுத்துகிறது என்று ஸ்டாலின் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


சிதம்பரத்தின் டீ ட்வீட்

https://twitter.com/PChidambaram_IN/status/977714327405789185

"சென்னை விமான நிலையத்தில் உள்ள காஃபி டேவில் டீ கேட்டேன். அவர்கள் சுடு தண்ணீரும், டீ பேக்கும் கொடுத்துவிட்டு 135 ரூபாய் வாங்கிக் கொண்டார்கள். திடுக்கிட்டுவிட்டேன்" என்று முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் ட்வீட் செய்திருந்தார். இந்த செய்தியை வெளியிட்டுள்ளது தி இந்து’ நாளிதழ். இந்த ட்வீட் 2800 முறை ரீட்வீட் செய்யப்பட்டதாக விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.


தினத்தந்தி - 'மாபெரும் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறினால், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

"நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் என கூறி காலக்கெடுவும் விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு. அந்த தீர்ப்பை துச்சமென மதித்து தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லி காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்கு தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்த பிரச்சினையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தி.மு.க., மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வாரி வழங்கி வருகிறது.இந்த நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு அளித்து உள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதில் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாக பறித்து முறித்துப்போடுகின்ற பகிரங்கமான எதிர்மறை செயலாகும்." என்று ஸ்டாலின் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


தினமணி - 'அம்பேத்கர் புகழைக் கெடுக்க முயற்சித்தவர்கள் தோற்றுவிட்டனர்: மோதி

அம்பேத்கரின் புகழைக் கெடுக்கவும், அவரை அவமதிக்கவும் முயற்சித்த பலரும் தோற்றுவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். (பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த) நானே, அம்பேத்கரின் தத்துவத்துக்கு உதாரணமாக விளங்குகிறேன். இப்போது அமைந்துள்ள புதிய இந்தியா ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது என்றும் அவர் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் கூறியதாக விவரிக்கிறது அந்தச் செய்தி.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
"ஏன் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்? பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இல்லை என்றால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இருக்காது. ஆண்களுக்குக்கும் பெண் நண்பர்கள் இருக்கக் கூடாது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X