For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கவே கூடாது: சோனியா, ராகுலிடம் கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினர்.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அவருடன் காவல் துறை அதிகாரிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

Don't release Rajiv's assassins: Plea to Sonia, Rahul Gandhi

இந்நிலையில் பலியான 15 பேரின் குடும்பத்தார், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர்கள் எம்.எஸ். திரவியம், கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து டெல்லிக்கு சென்றனர். அங்கு அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவே கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

English summary
The families of those who have got killed with the former PM Rajiv Gandhi met congress president Sonia and vice president Rahul Gandhi in Delhi. They have requested the Gandhis not to release Rajiv's assassins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X