For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசுக்களுக்கு தனி இடுகாடு அமைக்கப்பட வேண்டும் - உ.பி அமைச்சர் அசாம் கான் கோரிக்கை

Google Oneindia Tamil News

லக்னோ: உபி அமைச்சரான அசாம்கான் பசுக்களுக்கு தனி இடுகாடுகள் அமைக்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பசுக்களை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து சமீபகாலமாக குரல் கொடுத்துவரும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் அசாம் கான் பசுக்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவற்றுக்கென தனியாக இடுகாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என தற்போது வலியுறுத்தியுள்ளார்.

Don't slaughter cows, create burial grounds for them: Azam Khan

இங்குள்ள ராம்பூர் மாவட்டத்தில் புதிய சந்தை வளாகத்தை நேற்று திறந்துவைத்துப் பேசிய அசாம் கான் இதற்கு முன்னரும் பல்வேறு மொகலாயப் பேரரசர்கள் பசுக்கள் கொல்லப்படுவதை எதிர்த்த வரலாற்றை சுட்டிக்காட்டினார்.

"பசுக்கள் கொல்லப்படுவதை தடுப்பதில் நான் தீவிரமாக உள்ளேன். மலடாகிப்போய் விட்டது, வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பசுக்களை விலைக்கு விற்றுவிடாதீர்கள்.

அவற்றுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இறந்த பசுக்களை புதைப்பதற்கு என தனியாக இடுகாடுகள் உருவாக்கப்பட வேண்டும்" என அசாம் கான் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Uttar Pradesh minister Azam Khan, who has earlier advocated banning cow slaughter, on Sunday called for creating burial grounds for dead cows as a mark of respect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X