For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரலை காட்டி செல்பி எடுக்காதீங்க.. கைரேகையை ஹேக் பண்ணிடுவாங்க.. ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை

விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விஷயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விஷயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஐ.பி.எஸ்.ரூபா. இந்த விஷயத்தில் அவரின் அணுகுமுறை காரணமாக இந்தியா முழுக்க வைரலானார்.

இதன் காரணமாக இவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. தமிழிலும் கன்னடத்திலும் இந்த படம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் செல்பி குறித்து கூறிய விஷயம் ஒன்று வைரலாகி உள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன் செய்தி ஒன்று பரவியது . அதன்படி, சமூக வலைத்தளங்களில், கை விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து போடக்கூடாது என்று தகவல் வெளியானது. அப்படி செய்தால் நம்முடைய கைரேகை தகவல்கள் வெளியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் வதந்தி என்றும் சிலர் மறுத்தனர்.

பெரிய எச்சரிக்கை

பெரிய எச்சரிக்கை

இந்த நிலையில் இதே எச்சரிக்கையை ஐபிஎஸ் ரூபாவும் விடுத்துள்ளார். விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விஷயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து உள்ளது, சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

 விளக்கம் அளித்துள்ளார்

விளக்கம் அளித்துள்ளார்

இதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நம்முடைய, செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து பின் அதை வைத்து நமது கை ரேகையை எடுப்பார்கள். பின் அதை வைத்து பெரிய அளவில் மோசடிகளை செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

வேண்டாம்

வேண்டாம்

மேலும் இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கி, தவறு நடக்கும் இடங்களில் நம்முடைய கைரேகையை விட்டு செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.

English summary
Don't take a selfie by showing your fingers asks IPS Rupa. She says that it may lead hackers to hack people fingerprints from the selfie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X