For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ சீருடை போன்ற உடைகளை அணிய வேண்டாம்... போலீசார் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், கிஷ்த்வார் மாவட்டத்தில், பொதுமக்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிய வேண்டாம் என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ராணுவ சீருடை வடிவிலான ஆடைகள் கடைகளில் விற்கப்படுவதால் அவற்றை அணிந்து பாதுகாப்பான இடங்களிலும் ஊடுருவி தாக்குதல் நடத்துவது எளிது என்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dont wear dresses like military uniforms, Police warn

தற்போது, ஜம்மு - காஷ்மீரில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கிஷ்த்வார் மாவட்டத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிஷ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிய வேண்டாம். தீவிரவாதிகள், ராணுவ சீருடை போல் உடை அணிந்து, தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.

எனவே, பாதுகாப்பு படையினருக்கு, தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் என்பதால், பொதுமக்கள், ராணுவ சீருடை போன்ற உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், துணி கடைகளிலும், ராணுவ சீருடை போன்ற உடைகளை விற்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் சீருடையை மாற்றுவதற்கான ஆய்வுகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் சீருடையானது டெரிகாட் ஃபைபர் (terrycot fibre) வகையை சார்ந்த துணியால் செய்யப்பட்டதாகும். இது வெயில் காலங்களில் வீரர்களுக்கு அசவுரியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அனைத்து சீதோசன நிலைகளிலும் வீரர்கள் அணியும் வகையில் புதிய சீருடையை உருவாக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

English summary
jammu and kashmir: Police warning, Don't wear dresses like military uniforms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X