For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெருமிதத்துக்குரிய நட்பு: அகமதாபாத்தில் 6 முறை ஆரத்தழுவிய மோடி- டிரம்ப்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இந்தியா வருகை தந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் தங்களது நட்பின் இறுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அகமதாபத் நிகழ்ச்சிகளில் 6 முறை ஆரத்தழுவினர்.

இந்தியா- அமெரிக்கா உறவின் மிக முக்கிய திருப்பமாக டொனால்ட் டிரம்ப்பின் வருகை இடம் பிடித்துள்ளது. இந்தியாவை தமது மிகவும் நேசத்துக்குரிய நட்பு நாடாக இப்பயணத்தின் போது வெளிப்படுத்தினார் டிரம்ப்.

trump india visit

அகமதாபாத் விமான நிலையத்தில் டொனால்ட் டிரம்ப் விமானம் வந்திறங்கியது. அப்போது காரில் விமானத்தின் அருகே சென்ற பிரதமர் மோடி டிரம்ப் வருகைக்காக சில நிமிடங்கள் காத்திருந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கி வந்த டிரம்ப், பிரதமர் மோடியுடன் கை குலுக்கினர். இருவரும் ஆத்மார்த்த நண்பர்களைப் போல பரஸ்பரம் ஆரத் தழுவினர். இதன் பின்னர் சபர்மதி ஆசிரமத்தை டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டார். அங்கிருந்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றனர்.

நாறும் யமுனை.. நாறும் யமுனை.. "கழுவி விடும்" உ.பி. அரசு.... ஆத்தோரமா மல்லிகை தோரணம் வேற.. டிரம்ப் வருகையால் பிஸி!

லட்சக்கணக்கானோர் அந்த பிரமாண்ட மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த மைதானத்துக்குள் நுழைந்த போது பிரதமர் மோடியும் டிரம்ப்பும் மீண்டும் ஒரு முறை ஆரத் தழுவி நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தினர். பின்னர் பிரதமர் மோடியும் டிரம்ப்பும் தங்களது உரைகளை முடித்த போதும் கட்டியணைத்து மகிழ்வையும் நட்பையும் பரிமாறிக் கொண்டனர்.

அகமதாபாத் நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 6 முறையாவது இரு தலைவர்களும் ஆரத் தழுவி தங்களுக்கிடையேய பெருமிதத்துக்குரிய நட்பை உலகுக்கு வெளிப்படுத்திக் காட்டினர்.

English summary
US President Donald Trump and Prime Minister Narendra Modi shared at least 6 hugs in Ahmedabad, Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X