For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    The Beast: Donald Trump car specifications | இந்தியா வரும் டிரம்ப் காரில் என்ன வசதிகள் இருக்கும் ? dsv

    டெல்லி: பிப்ரவரி 24 ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வரும் நிலையில், 'தி பீஸ்ட்' (The Beast) என்ற செல்லப்பெயர் கொண்ட அவரது அதிகாரப்பூர்வ அரசு கார், இங்கு வந்து சேர்ந்துவிட்டது.

    உலக தலைவர்களிலேயே மிகவும் அதிநவீன காரை பயன்படுத்துவது அமெரிக்க அதிபர்கள்தான். அதில் டொனால்ட் ட்ரம்ப்பும் விதிவிலக்கு கிடையாது. முந்தைய அதிபர் பராக் ஒபாமா பயன்படுத்திய அதிநவீன 'காடிலாக் ஒன்' கார் கூட போதாது என புதிய காரை மாற்றிவிட்டார் ட்ரம்ப்.

    காடிலாக் நிறுவனத்தின், Armoured Limousine வகை காரை அவர் பயன்படுத்துகிறார். இந்த கார் 2018 செப்டம்பர் 24 முதல், பயன்பாட்டில் உள்ளது. இந்த காரின், வியப்பூட்டும், அதிநவீன சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாமா?

    குண்டு துளைக்காது

    குண்டு துளைக்காது

    காரின் ஜன்னல் கண்ணாடி மற்றும் பாலிகார்பனேட்டால் கலந்து, ஐந்து அடுக்குகளால் உருவானவை. அவை துப்பாக்கி தோட்டாக்களையும் தாங்கி அசத்தலாக நிற்கும். டிரைவரின் ஜன்னலை மட்டுமே திறக்க முடியும், அதவும் 3 இஞ்ச் மட்டுமே. பம்ப்-ஆக்சன் வகை துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை பீரங்கிகள், மற்றும் அதிபரின் ரத்த வகையுடன் கூடிய ரத்த பை ஆகியவை காருக்குள் இருக்கும். இவை அவசர தேவைக்காக.

    அசாத்திய டிரைவர்

    அசாத்திய டிரைவர்

    டிரைவரின் கேபினில் தகவல் தொடர்பு மற்றும் ஜி.பி.எஸ் கண்காணிப்பு உள்ளது. அமெரிக்க ரகசிய சேவை பிரிவால் பயிற்சியளிக்கப்பட்டவர்தான், அதிபரின் டிரைவர். இவர் மிகவும் சவாலான நிலைமைகளையும் சமாளிக்க பயிற்சி பெற்றவர், அவசரகாலத்தில், அதிபரை தப்பிக்க வைத்தல், எதிரிகளுக்கு டிமிக்கி கொடுத்தல் போன்றவை இவருக்கு அத்துப்படி. 180 டிகிரியிலும், இவரால் காரை திருப்பி ஓட்டிச் செல்ல முடியும்.

    கார் அசராது

    கார் அசராது

    வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளை வைத்து தாக்கினாலும் கார் அசராமல் நிற்கும். எஃகு தகடுகள் இதற்காக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காரின் டயர்களை பஞ்சர் ஆக்க முடியாது. டயரே வெடித்தாலும், காரில் இருப்பவர்களுக்கு ஒன்றும் ஆகாது. கார் தொடர்ந்து பயணிக்கும். அமெரிக்க அதிபரைத் தவிர நான்கு பேர் இந்த காரில் அமர முடியும். காரின் உட்புறம் ஒரு கண்ணாடி மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியை அதிபர் நினைத்தால் மட்டுமே கீழே இழுத்துவிட முடியும். அவசர கால தேவைக்காக ஒரு பேனிக் பட்டன் உள்ளது. மேலும், ஆபத்து காலங்களில் தானாகவே ஆக்ஸிஜன் வெளியாகி அதிபருக்கு பிராணவாயுவை சப்ளை செய்யும் வசதி உள்ளது.

    பென்டகனுடன் தொடர்பு

    பென்டகனுடன் தொடர்பு

    ரசாயன ஆயுதங்களை வீசினாலும், அதிபரை அது தாக்க முடியாது. அதிபரின் இருக்கையில் துணை அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான, பென்டகனுக்கு நேரடி தொடர்பு கொள்ள செயற்கைக்கோள் தொலைபேசி வசதி உள்ளது. எனவே, அதிபர் எங்கே இருந்தாலும், அமெரிக்க ராணுவத்திற்கு உடனடியாக கட்டளைகளை பிறப்பிக்க முடியும்.

    ரூ.12 கோடி

    ரூ.12 கோடி

    இந்த கார் 5.0 லிட்டர் டீசல் இஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, அதன் அதிக எடை மற்றும் அளவு காரணமாக 3 கி.மீ. மட்டுமே மைலேஜ் கொடுக்கும். இந்த காரின் எடை 9,500 கிலோவாகும். ஒரு ஆடி ஏ3 வகை காரின் எடை 1500 கிலோவுக்கும் குறைவுதான் என்பது கவனிக்கத்தக்கது. அதிபர் காரின் விலை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 கோடியாகும்.

    English summary
    All you must know about US President’s car Beast car coming to India All you must know about the car.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X