For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் கை ராட்டை.. இது காந்தியோட குரங்கு பொம்மை.."மோடி என் நண்பன்".. டிரம்ப் செம ஹேப்பி!

டிரம்பின் கையெழுத்து வைரலாகிறது

Google Oneindia Tamil News

அமகதாபாத்: "மோடி என் நண்பன்" என்று எழுதி ட்ரம்ப் போட்ட கோடு கோடு மாதிரி இருக்கும் கையெழுத்துதான் சோஷியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கின்றன.. இதுதான் டிரம்ப் கையெழுத்தா என்று மக்கள் ஆர்வத்துடன் அதனை பார்த்து, ஷேர் செய்தும் வருகின்றனர்.

Recommended Video

    Trump india visit | சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்... அகமதாபாத் நகரில் காலை வைத்ததுமே ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து கைகுலுக்கி வரவேற்றார்... இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

    அதாவது சங்கொலி முழங்க... மேளதாளங்கள் இசைக்க.. குஜராத் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து டிரம்ப் தம்பதி சபர்மதி ஆசிரமத்துக்கு வந்தடைந்தனர்.

    சால்வை

    சால்வை

    பிரதமர் மோடி அவருக்கு சால்வை அனுவித்து வரவேற்றார்... அத்துடன் தம்பதி இருவருக்கும் கதர் ஆடை வழங்கினார். அங்கிருந்த மகாத் காந்தி போட்டோவுக்கு மோடி, ட்ரம்ப் ஆகியோர் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்.. சபர்மதி ஆசிரமம் முழுவதையும் அதிபர் டிரம்புக்கு மோடி சுத்தி காட்டினார். காந்தி பயன்படுத்திய பொருள்கள் குறித்தும் அதன் மகிமைகள் குறித்தும் அதிபர் டிரம்புக்கு மோடி விளக்கமாக எடுத்து சொன்னார்.

    ராட்டை

    ராட்டை

    ஆசிரமத்தில் இருந்த ராட்டையை டிரம்ப்பும் அவரது மனைவியும் சுற்றி வியந்தார். ராட்டையை சுற்றும்போது தம்பதி இருவருமே தரையில் உட்கார்ந்து கொண்டனர்.. அப்போது மெலனியா ராட்டையை சுழற்ற, அதற்கு ஏற்றவாறு பஞ்சுத் திரி நூலாக மாறுவதை டிரம்ப் வியப்போடு பார்த்தார். இதற்கு பக்கத்தில் இருந்தபடியே பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் ராட்டை செயல்படும் விதம் குறித்து மிகுந்த ஆர்வத்தோடு கேட்டறிந்தனர். ஆர்வத்துடன் நூல் நூற்றி மகிழ்ந்தனர்.. இதற்கு பின்னர் மகாத்மா காந்தியின் 3 குரங்கு பொம்மைகளை காட்டி அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கமாக எடுத்து சொன்னார். கடைசியாக அங்கிருந்த கிளம்பும்போது, சபர்மதி ஆசிரமத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அதிபர் ட்ரம்ப் தனது கருத்தை பதிவிட்டார்.

    வைரல் கையெழுத்து

    வைரல் கையெழுத்து

    அந்த பார்வையாளர்கள் கையேட்டில் "என் நல்ல நண்பர் மோடி... இந்த பயணம் அற்புதமானது" என்று டிரம்ப் கையெழுத்திட்டார்.. டிரம்பின் இந்த கையெழுத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதேபோல, மனைவி மெலனியாவும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். டிரம்பின் "கேப்பிட்டல்" எழுத்தில் எழுதியுள்ளது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.. ஆனால் அவர் கையெழுத்து மட்டும் கோடு கோடாக உள்ளது.. இதுதான் டிரம்பின் கையெழுத்தா என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    English summary
    donald trump visit: Modi is my great friend: trumps signature becomes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X