For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்க முடியாமல் நாடகமாடும் மோடி... மமதா தாக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளதாவது:

கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை கடுமையாக நான் எதிர்க்கின்றபோதும் பொதுமக்கள், சிறுவணிகர்கள் குறித்து எனக்கு ஆழமான கவலை உண்டு. ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்ட நிலையில் நாளை அவர்கள் அத்தியாவசிய பொருட்களை எப்படி வாங்குவார்கள்?

Drama to Divert Failure in Getting Back Black Money from Abroad, says Mamata Banerjee

பொருளாதாரத்தில் பேரிடரைத்தைத்தான் இது ஏற்படுத்தும். இந்திய மக்களுக்கு இது மிகப் பெரிய இழப்பை தரும்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி அதில் தோற்றுப் போய்விட்டார். அதில் இருந்து தம்மை தற்காக்க இப்படி ஒரு நாடகமாடுகிறார்.

வங்கிகளில் ரூ100 நோட்டுகள் போதுமானதாக இல்லை. அப்படியான நிலையில் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களை எப்படி வாங்க முடியும்? பிரதமர் மோடி தம்முடைய இரக்கமற்ற கொடுமையான அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு மமதா பானர்ஜி சாடியுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at PM Modi, following his announcement that Rs 500 and Rs 1,000 currency notes will cease to be legal tender, dubbing it drama to divert attention from his failure in getting back black money from abroad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X