For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இங்கிலிஷ் நஹி மாலும்"... இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் ரயில்வே தேர்வுகளில் வெல்லும் அவல நிலை!!

Google Oneindia Tamil News

ரயில்வே தேர்வுகளில் வேறு எந்த மொழியும் தெரியாமல், இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் பலர் அதிகாரிகளாக பணியில் சேர்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக ரயில்வே துறையை சேர்ந்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

கடந்த 9ந் தேதி திருப்பரங்குன்றம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் எதிர் எதிரே வந்தன. ஆனால், கடைசி நேரத்தில் ரயில்வே அதிகாரிகள் தவறை கண்டுபிடித்து, ஓட்டுனர்களை வாக்கிடாக்கியில் அழைத்து ரயிலை நிறுத்தக் கட்டளையிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

DREU Manoharan Urges RRB Should Conduct English Proficiency Test

இந்த பிரச்னைக்கு கள்ளிக்குடி நிலைய அதிகாரி திவ்சிங் மீனா இந்தியை தவிர வேறு மொழி தெரியாததே காரணம் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்தி தெரிந்தவர்கள் ரயில்வே தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற்று வருவதுடன், அவர்களில் பலர் ஆங்கில அறிவு இல்லாமல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஆங்கிலத்தை பொது மொழியாக பயன்படுத்த தென்னக ரயில்வே அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி இருந்தாலும், ரயில்வே துறையில் பணியில் இருக்கும் பல வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்வே துறை தேர்வுகளில் ஆங்கிலம் தவிர்த்து, இந்தியிலும் தேர்வு எழுதும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

மொழிபிரச்னையால் ரயில் விபத்து அபாயம்.. இனி நோ தமிழ்.. ஆங்கிலத்தில் தான் பேசணும்.. ரயில்வே கட்டளைமொழிபிரச்னையால் ரயில் விபத்து அபாயம்.. இனி நோ தமிழ்.. ஆங்கிலத்தில் தான் பேசணும்.. ரயில்வே கட்டளை

இதனால், ஆங்கிலம் தெரியாத பல வட இந்திய மாணவர்கள் தாய்மொழியான இந்தியிலேயே தேர்வு எழுதி எளிதாக வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்துவிடுகின்றனர். இதுபோன்று பணியில் சேர்பவர்களால்தான் திருமங்கலம் அருகே நடந்த குளறுபடிக்கு காரணம் என்று ரயில்வே துறையில் பணியாற்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்னை தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில்,"வட இந்திய மாணவர்கள் தாய்மொழியான இந்தியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுவிடுகின்றனர். அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை எழுத, படிக்க தெரியாது. இந்தியில் தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவர்களின் ஆங்கில புலமையை சோதிக்கும் விதத்தில் எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வுகளை நடத்த வேண்டும்.

பொதுத்துறை மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றுவது அவசியம். இல்லையெனில், ஆங்கிலம் தெரியாமல் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அவர்கள் விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட பகுதியிலேயே பணியமர்த்தும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, இந்தி மட்டுமே தெரிந்த அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்றுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில் பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் மொழி புரியாமல் பெரும் விபத்துக்களுக்கு அடிகோலும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே துறை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது அவசியம் என்றும் கோரியுள்ளனர்.

English summary
"RRB should also conduct written and interview to examine candidates proficiency in English before allowing to regular competitive examinations," said Manoharan, deputy general secretary of DREU.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X