For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. அதே சமயம் நேபாளத்திலும் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.

லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4.50 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக இந்த அதிர்வு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.

 Earthquake hit Nepal and kashmir by today morning as of now no causalities Reported says IMD

அதுபோல இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை எட்டு மணி அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நில அதிர்வு நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிழக்கில் 83 கி.மீ., தொலைவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சேதங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும் நில அதிர்வுக்குப் பிறகான பிந்தைய பாதிப்புகளால் நேபாள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

English summary
Earthquake hit Nepal and kashmir by today morning as of now no causalities Reported says IMD.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X