For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா பீதிக்கு மத்தியில் அஸ்ஸாமில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

Google Oneindia Tamil News

குவகாத்தி: கொரோனா வைரஸ் திகிலுக்கு மத்தியில், அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். இது தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் லேசாக பூமி குழுங்கியது பூகம்பத்தின் தீவிரம் மற்றும் மையப்பகுதி இன்னும் அறியப்படவில்லை. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

சமீபத்தில், கொரோனா வைரஸின் பேரழிவிற்கு மத்தியில் அமெரிக்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 20 முதல் 30 வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Earthquake tremors felt in Guwahati & other parts of the Assam state

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இதேபோல் மார்ச் 21 அன்றும் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சத்தீஸ்கரின் தெற்குப் பகுதியில் உள்ள பஸ்தார் மற்றும் சுக்மா மாவட்டங்களில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், ஒடிசாவின் மல்கன்கிரி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் மூழ்கினர்.

கொரோனா வைரஸ்.. காற்றில் பரவும் தொற்று நோயா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் கொரோனா வைரஸ்.. காற்றில் பரவும் தொற்று நோயா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

சத்தீஸ்கரில் பஸ்தார் மற்றும் அண்டை மாவட்டமான சுக்மா மாவட்டத்தில் மார்ச் 21 அன்று காலை 11:15 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சத்தீஸ்கர்-ஒடிசா எல்லைக்கு அருகில் ஜகதல்பூருக்கு தென்கிழக்கில் 42 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. பூகம்பத்திற்குப் பிறகு மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

English summary
Assam: Earthquake tremors felt in Guwahati & other parts of the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X