For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.. சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பாஜகவின் முக்கியமான விருப்பங்களில் ஒன்று, நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடத்துவது. அதன்முலம் தேசிய கட்சிகள் எளிதாக மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ள முடியும்.

EC can hold the simultaneous poll for state and central says Law Commission

அதேபோல் எளிதாக மாநிலங்களில் கால் பதிக்க முடியும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது இதுகுறித்து சட்ட ஆணையம் பரிந்துரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தினால் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர மற்ற மாநில சட்டசபை, மக்களவைக்கு தேர்தலை இணைந்து நடத்தலாம். காஷ்மீருக்கு மட்டும் தனியாக தேர்தலை நடத்தலாம்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சட்ட திருத்த வேண்டும்.அரசியல் சாசனப் பிரிவு 172 ஐ திருத்தம் செய்யாமல் சாத்தியமில்லை.

அதேபோல் பல்வேறு பொருளாதார வல்லுனர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டும். என்னமாதிரியான எதிர்வினைகள் இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

English summary
EC can hold the simultaneous poll for state and central says Law Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X