For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 1 முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காக மட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், வாக்களிக்கும் உரிமையில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விளக்கம் அளித்துள்ளார்.

EC drive to link electoral rolls with Aadhaar from March 1

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுடன், தேர்தலின் போது கள்ள ஒட்டு போடுவதையும் தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

676 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியை முடிக்க கூடுதலாக 2 மாதங்கள் அவகாசம் அளிக்கைபடும் என்றார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களை தூக்கில் போடமுடியுமா என கேள்வி எழுப்பினார். கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் 5 முதல் 10 % வாக்குறுதிகள் மட்டுமே நடைமுறைக்கு வருவதாக கூறிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டிப்பதாக தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் பிரம்மா கூறினார்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மேலும் அவர்,"வாக்காளர் பட்டியலை சீர் செய்யும் பணிகளை ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் செய்து முடிப்பதற்கான செயல் திட்டத்துடன் வருமாறு கமிஷன் அதிகாரிகளுக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீர் செய்வதை உறுதி செய்யும்படியும் நசீம் ஜைதி கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
The Election Commission of India will conduct Electoral Roll Purification and Authentication Drive (ERPAD) by linking electoral rolls with Aadhaar cards (numbers) from March 1 to August 15 this year, Chief Election Commissioner H.S. Brahma stated here on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X