For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் ஒட்டுக்களை யாருக்கு போட்டீர்கள் என்று அறியலாம் - நஜீம் ஜைதி

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட். கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விளக்கம் அளித்தார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் ஜைதி 403 உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபை ஆயுட்காலம் மே 27ஆம் தேதி முடிவடைகிறது. அதே போல் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையின் ஆயுட்காலம் மார்ச் 18ஆம் தேதி நிறைவடைகிறது. மேலும் 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக நஜீம் ஜைதி தெரிவித்தார்.

EC offers new facility to the voters

அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

  • வாக்களிக்கும் மேஜையில் தடுப்பு உயரம் அதிகரிக்கப்படும் -
  • வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் உதவ சேவை மையம்
  • 5 மாநிலங்களில் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
  • மாற்றுத்திறளானிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்
  • யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் வசதி இருக்கும்
  • உத்தரபிரதேசம் 403, பஞ்சாப் 117, கோவா 40 மணிப்பூர் 60, உத்தரகாண்ட் 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • 1லட்சத்து 85ஆயிரம் வாக்குச்சாவடிகள் 5 மாநிலங்களில் அமைக்கப்படும்
  • யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு நோட்டா வசதி
  • வேட்புமனுவில் வேட்பாளர் தனது புகைப்படத்தை ஒட்ட வேண்டும்
  • துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள்
  • எல்லாமே வெளிப்படையான முறையில் நடைபெறும்
  • தொலைக்காட்சிகளில் வரும் வேட்பாளர்களின் பிரச்சாரமும் வேட்பாளர்கள் செலவு கணக்கில் சேர்க்கப்படும்
  • இன்றுமுதல் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.
English summary
EC has rolled out a new facility to the voters of the 5 states for the coming assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X