For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புதிய சாலை திட்டங்கள்.. அருண் ஜெட்லி அதிரடி அறிவிப்புகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பல ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புதிய சாலை திட்டங்களை அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: இந்திய பொருளாதாரம் கடந்த 3 வருடங்களாகவே தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது. கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Economic fundamentals remain strong: Finance Minister Arun Jaitley

எந்த பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்திய பொருளாதார அடிப்படை வலிமையாகத்தான் உள்ளது.

  • 2000 கி.மீ தூர கடற்கரை சாலை திட்டம் பாரத் மாலா என்ற பெயரில் அறிவிக்கப்பட உள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 34800 கிமீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். 5,35000 கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
  • தற்போது நாட்டில் நடப்பு பற்றாக்குறை அளவு குறையாக, 2 சதவீதத்திற்கும் உள்தான் உள்ளது.
  • ஜிஎஸ்டி என்பது மிகப்பெரிய சீர்திருத்தம். கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு உதவியுள்ளது.
  • 2014 முதலே பண வீக்கம் படிப்படியாக குறைந்துகொண்டு வருவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
  • பேட்டியின்போது உடனிருந்த நிதி சேவை செயலாளர் ராஜிவ்குமார் கூறுகையில், பொதுத்துறை வழங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வலுவான வங்கி அமைப்பு நமது நாட்டுக்கான தற்போதைய தேவை என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பொருளாதார போக்கு குறித்து பிரசன்டேசன் காட்டப்பட்டது.

English summary
Economic fundamentals remain strong, says Finance Minister Arun Jaitley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X