For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்டர் ஜேட்லி, ஜிஎஸ்டியால் பொருளாதாரம் ஐசியுவில் அட்மிட்டாகியுள்ளது.. ராகுல் கிண்டல்

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் ஐசியுவில் உள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் ஐசியுவில் உள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேநேரத்தில் பிரதமர் மோடிக்கு போட்டியாக டிவிட்டரிலும் ராகுல் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார்.

Economy in ICU: Rahul gandhi slams Arun Jaitley

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, நிதியமைச்சர் அருண் ஜேட்லியை டாக்டர் என குறிப்பிட்டுள்ள ராகுல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்தியா பொருளாதாரம் ஐசியுவில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுடைய மருந்து அந்தளவுக்கு வேலை செய்யவில்லை என்றும் ராகுல் கிண்டலடித்துள்ளார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

ஜிஎஸ்டியை கப்பர் சிங் டேக்ஸ் என அண்மையில் விமர்சித்த ராகுல்காந்தி மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதாக கூறினார். இதற்கு பதில் அளித்த பா.ஜ.க., 2 ஜி, நிலக்கரி ஊழல் போன்ற பழக்கம், முறையான வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress vice president Rahul Gandhi on Thursday took a swipe at finance minister Doctor Arun Jaitley over demonetisation and the Goods and Services Tax (GST), saying that the Indian economy was in the "ICU" because of the two reforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X