For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார மந்தநிலைக்கு ப.சி.காரணம்... விமானப் படை முன்னாள் அதிகாரி தற்கொலை- மோடிக்கு கடிதம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    A retired Air Force officer from Assam committed suicide

    அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமே காரணம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி பிஜன் தாஸ்.

    பொருளாதார தேக்க நிலையால் பல்வேறு துறைகள் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளன. இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    Economy Slowdown: Retd IAF officer commits suicide

    இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான அஸ்ஸாமை சேர்ந்த பிஜன் தாஸ் (வயது 55) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட 5 பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது.

    அதில் பொருளாதார மந்த நிலையால் தாம் தற்கொலை செய்வதாகவும் இதற்கு காரணமே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் பிஜன் தாஸ். மேலும், பொருளாதார நெருக்கடி என்பது திடீரென ஏற்படுவது அல்ல. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசை குற்றம்சாட்டுவது சரியல்ல. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை தற்காலிக தாக்கங்கள்தான். அதற்கும் பொருளாதார தேக்க நிலைக்கும் தொடர்பு எதுவும் இல்லை.

    புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சுபுலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சு

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள், மோசமான பொருளாதார கொள்கைகள்தான் தற்போதைய நெருக்கடிக்கே காரணம் எனவும் அக்கடிதத்தில் பிஜன் தாஸ் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தமது இறுதி சடங்குக்காக ரூ1500, அறை வாடகை ரூ500 ஆகியவற்றையும் அறையில் வைத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    தமது மகனுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு அக்கடிதத்தில் பிஜன் தாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    English summary
    A retired Air Force officer from Assam committed suicide at a hotel in Uttar Pradesh's Allahabad and left a startling suicide note addressed to Prime Minister Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X