For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்யானந்தா எங்கே இருக்கிறார்?.. கைலாசா வெப்சைட் ஐ.பி. அட்ரஸை வைத்து கண்டுபிடிப்பு.. பரபர தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியானந்தா செய்யும் சேட்டைகள்... சிறைக்குள் அடைவது எப்போது?

    டெல்லி: நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பது பற்றி ஈகுவடார் அரசு பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.

    பாலியல் புகார், கடத்தல் புகார்களுக்குள்ளான நித்யானந்தா அமெரிக்காவின் ஈகுவடாரில் பதுங்கியிருப்பதாகவும் அவர் அங்கு எல்லைகளற்ற தனித்தீவை விலைக்கு வாங்கியதாகவும் அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என ஈகுவடார் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் அவர் ஈகுவடார் நாட்டிற்கு எப்போது வந்தார், அங்கிருந்து அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் போன்ற விளக்கங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    இன்றைய ஹாட் டாப்பிக்.. இன்றைய ஹாட் டாப்பிக்.. "மா. மஞ்சுளா".. பரந்து விரிந்த நித்தியானந்தாவின் பக்தி சாம்ராஜ்ஜியம்!

    துறைமுக நகர்

    துறைமுக நகர்

    இதுகுறித்து அந்த நாடு அளித்த விளக்கத்தில் நித்யானந்தா கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி முதல்முறையாக ஈகுவடார் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்தார். அந்த நாட்டின் குயாக்குல் என்ற துறைமுக நகருக்கு அருகே அவர் தங்கியிருந்தார்.

    ஆகஸ்ட் மாதம்

    ஆகஸ்ட் மாதம்

    இந்த நிலையில் சர்வதேச பாதுகாப்பு கேட்டும் ஈகுவடார் நாட்டின் அகதியாக ஏற்றுக் கொள்ள அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இதையடுத்து அங்கு அவர் அக்டோபர் 19-ஆம் தேதி வரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    வெளியேற்றம்

    வெளியேற்றம்

    மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றத்தை அவர் நாடினார். இதனால் அவரை அந்த நாட்டிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேற்றப்பட்டார்.

    ஐபி அட்ரஸ்

    ஐபி அட்ரஸ்

    அந்நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் தான் அடுத்து செல்லவுள்ள இடம் கரீபியன் கடல் அருகே ஹைட்டி என்ற தீவு என நித்யானந்தா சொல்லியதாக ஈகுவடார் அரசு தெரிவித்தது. நித்யானந்தாவின் கைலாசா இணையதளத்தின் ஐபி அட்ரஸ் அடிப்படையில் அவர் பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் இருக்கலாம் என தெரிகிறது.

    English summary
    Ecuador Government explains whereabouts of Nityananda, How he enters into its country?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X