For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு

நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.11,400 கோடி கடன் பெற்று கொண்டு மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து வங்கி நிர்வாகத்தின் புதிய அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து பங்கு சந்தைக்கு அறிக்கை அனுப்பினர்.

ED searches in 21 places which belongs to Nirav Modi

இதை தொடர்ந்து நீரவ் மோடியின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது நீரவ் மோடி தலைமறைவாக உள்ள நிலையில் சென்னையில் அவருடன் தொடர்புடைய பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது ரூ. 25 கோடி வைரம், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் பறிமுதல் செய்தனர். இதுவரை நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5674 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

English summary
Enforcement Directorate in 21 places which belongs to Nirav Modi. They seizes Rs. 25 crores worth Diamonds, Gold and Costly stones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X