For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”நிலம் கையகப்படுத்தும் மசோதா” விவகாரத்தில் விரைவில் சுமூகத் தீர்வு– சொல்கிறார் வெங்கையா

Google Oneindia Tamil News

டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து எதிர்க்கட்சியினருடன் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், " நிலம் கையக்கப்படுத்துதல் தொடர்பான மசோதாவில் விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். லோக்சபாவில் நடந்த விவாதத்தில், மத்திய அரசு நில மசோதாவில் 7 திருத்தங்கள் செய்தது.

Efforts underway to convince Opposition on land bill, says Venkaiah Naidu

இந்த மசோதாவில் சுமூக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் கூறும் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்கும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மைகள் ஏற்படும். விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்கினால் அவர்களுக்கு அதன் மதிப்பை விட 4 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்படும்.

நிலங்களை தரும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு, வேலைவாய்ப்பு இல்லை என்றால் 20 ஆண்டுகளுக்கு உதவித்தொகை போன்ற ஷரத்துகள் உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த மசோதா மிகவும் முக்கியமானது" என கூறினார்.

English summary
Facing stiff opposition on the Land Acquisition Bill, government on Wednesday said efforts are underway to convince political parties on the measure and expressed hope that a consensus would be evolved as it is willing to accommodate their suggestions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X