For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய இணை அமைச்சராகிறார் ம.பி எம்.பி. இல. கணேசன்?

மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யான பாஜக மூத்த தலைவர் இல. கணேசனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான இல. கணேசனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசனுக்கு நீண்டகாலமாக பதவிகள் எதுவும் தரப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலே இல. கணேசன் மத்திய அமைச்சராகிறார் என கூறப்பட்டு வந்தது.

Ela Ganesan to get Cabinet berth?

இந்த நிலையில் அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக இல. கணேசன் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இல. கணேசன், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இல. கணேசனுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். தமிழக எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய இணை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said that Senior BJP Leader and Rajya Sabha MP from Madhya Pradesh Ela.Ganesan likely to get Cabinet berth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X