For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

58 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: பாஜக- 19; காங்.- 10; திரிணாமுல்-4; பிஜேடி-3; டிஆர்எஸ்-3

58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளன. ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126 எம்.பிக்கள் தேவை. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

Polls to 58 Rajya Sabha seats will be held on today.

அதிகபட்சமாக உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.

58 இடங்களுக்கான தேர்தல்களில் பாஜக 19; காங்கிரஸ் 10; திரிணாமுல் காங்கிரஸ் 4; பிஜூ ஜனதா தளம் 3; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 3 இடங்களிலும் வென்றுள்ளன.

தேர்தல் முடிவுகள்:

Newest First Oldest First
1:59 PM, 23 Mar

காங். எம்.எல்.ஏக்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக புகார்
1:57 PM, 23 Mar

கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு என புகார்
11:13 AM, 23 Mar

சட்டீஸ்கர்: ராய்ப்பூரில் வாக்களித்த எம்.எல்.ஏக்கள்
11:13 AM, 23 Mar

கர்நாடகா: பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்
11:13 AM, 23 Mar

உ.பி: ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தேன் என பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ அனில் சிங் பரபரப்பு பேட்டி
11:12 AM, 23 Mar

கேரளா: திருவனந்தபுரத்தில் ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்
9:56 AM, 23 Mar

கர்நாடகா: பெங்களூருவில் எம்.எல்.ஏக்களுடன் சித்தராமையா ஆலோசனை
9:56 AM, 23 Mar

ராஜ்யசபா தேர்தலில் பாஜக எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட வாய்ப்பு உண்டு- ராம்கோபால் யாதவ்
9:56 AM, 23 Mar

ராஜ்யசபா தேர்தலில் சமாஜ்வாதி எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி ஓட்டுப் போடமாட்டார்கள்: ராம் கோபால் யாதவ்
9:49 AM, 23 Mar

கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர், ஜவடேகர் மற்றும் எதியூரப்பா ஆலோசனை
9:49 AM, 23 Mar

உ.பி.யில் எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை
9:49 AM, 23 Mar

கொல்கத்தாவில் எம்.எல்.ஏ.க்கள் கியூவில் நின்று வாக்களிப்பு
8:51 AM, 23 Mar

வாக்குப் பதிவு முடிந்ததும் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை
8:51 AM, 23 Mar

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு
8:51 AM, 23 Mar

ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 9 மணிக்கு தொடக்கம்
7:50 AM, 23 Mar

கர்நாடகாவில் 4 எம்.பி இடங்களுக்கு போட்டி
7:50 AM, 23 Mar

காங்கிரஸ் 3 எம்.பிக்களையும் பாஜக ஒருவரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம்
7:50 AM, 23 Mar

சத்தீஸ்கரில் பாஜக வேட்பாளர் வெல்வது எளிது.
7:50 AM, 23 Mar

மத்திய பிரதேசத்தில் பாஜக 4, காங்கிரஸ் ஒருவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புகிறது
7:50 AM, 23 Mar

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் வஷிஸ்ட நாராயண்சிங், மகேந்திர பிரசாத்; பாஜகவின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, ஆஸ்பாக் கரீம், காங்கிரஸின் அகிலேஷ் பிரசாத் சிங் போட்டியின்றி தேர்வு
7:50 AM, 23 Mar

குஜராத்தில் பாஜகவின் புருஷோத்தம் ரூபலா, மன்ஷுக் பாய் மாண்ட்வியா, காங்கிரஸின் அமி யாக்யானிக், நரன் ரத்வா ஒருமனதாதக தேர்வு
7:50 AM, 23 Mar

ஹரியானாவில் பாஜகவின் லெப்.ஜெனரல் (ஓய்வு) டிபி வஸ்தா ஒருமனதாக தேர்வு
7:50 AM, 23 Mar

இமாச்சலில் மத்திய அமைச்சர் நட்டா ஒருமனதாக தேர்வு
7:50 AM, 23 Mar

மகாராஷ்டிராவில் பாஜகவின் நாராயண் ரானே, பிரகாஷ் ஜவடேகர், வி முரளிதரன், காங்கிரஸின் குமார் கேட்கர், தேசியவாத கங்கிரஸ் வந்தனா சவான், சிவசேனாவின் அனில் தேசாய் ஒருமனதாக தேர்வு
7:50 AM, 23 Mar

உத்தரகாண்ட்டில் பாஜகவின் அனில் பலூனி ஒருமனதாக தேர்வு
7:49 AM, 23 Mar

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளத்தின் பிரஷாத் நந்தா, செளம்யா ரஞ்சன் பட்நாயக், அட்சுயா சமந்தா ஒருமனதாக தேர்வு
7:49 AM, 23 Mar

ராஜஸ்தானில் பாஜகவின் பூபேந்திர யாதவ், கிரோடி லால் மீனா, மதன் லால் சைனி ஒரு மனதாக தேர்வு
7:39 AM, 23 Mar

தெலுங்கானாவில் 3 எம்.பி. இடங்களுக்கு போட்டி
7:39 AM, 23 Mar

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சந்தோஷ்குமார், லிங்கையா யாதவ், பிரகாஷ் முதிராஜ் ஒருமனதாக தேர்வு
7:39 AM, 23 Mar

ஜார்க்கண்ட்டில் 2 எம்.பி இடங்களுக்கு போட்டி
READ MORE

எந்தெந்த மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்?

மாநிலம் மொத்த சீட்டுகள் போட்டியின்றி தேர்வு (மார்ச் 15ல்) இன்று தேர்தல் நடைபெறும் இடங்கள்
1 ஆந்திரா36
2 பீகார்63
3 சட்டீஸ்கர்1 1
4 குஜராத்44
5 ஹரியானா11
6 ஹிமாச்சல்11
7 கர்நாடகா4 4
8 மத்திய பிரதேசம்55
9 மகாராஷ்டிரா66
10 தெலுங்கானா3 3
11 உத்தரபிரதேசம்10 10
12 உத்தரகாண்ட்11
13 மேற்கு வங்கம்5 5
14 ஒடிசா330
15ராஜஸ்தான்
3
3 0
16 ஜார்கண்ட்2 2
மொத்தம்583325

ராஜ்யசபா தேர்தல்.. போட்டியின்றி தேர்வு விவரம்

கட்சி போட்டியின்றி தேர்வு
பாஜக 16
காங்கிரஸ் 5
பிஜுஜனதாதளம் 3
தெலுங்கு தேசம் 2
ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் 1
ஐக்கிய ஜனதாதளம்2
ராஷ்டிரிய ஜனதாதளம்2
சிவசேனா 1
தேசியவாத காங்கிரஸ் 1
English summary
Polls to 58 Rajya Sabha seats will be held on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X