For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெத்மலானி உட்பட வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் பேர் மிஸ்ஸிங்... மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம்

|

மும்பை: மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் சுமார் மூன்று லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டதால் நேற்றைய தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தேர்தல் கமிஷன் இன்று மன்னிப்பு கோரியுள்ளது.

நேற்று நடைபெற்ற 16வது லோக்சபாவிற்கான 6ம் கட்ட தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் மூன்று லட்சம் வாக்களர்கள் தங்களுடைய பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

Election Commission apologizes for missing names in Maharashtra voters' lists

விடுபட்ட வாக்காளர்கள் பட்டியலில் எச்.டி.எப்.சி தலைவர் தீபக் பரேக், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அதுல் குல்கர்னியும் ஆகியோரும் அடங்குவர். வாக்களர் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போனது குறித்து வழக்கு தொடரப் போவதாக மக்கள் தெரிவித்தன்ர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக தேர்தல் கமிஷனர் எச்.எஸ்.பர்மா கூறுகையில், ‘வாக்களர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்தாண்டு நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The Election Commission today apologized for the large number of names missing from voters' lists in Maharashtra and said it would investigate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X