For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.. நான் இதை சொல்லியே தீருவேன்.. மமதா பகீர்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த கலவரம் நிறைய பின்விளைவுகளை வரிசையாக ஏற்படுத்தி வருகிறது. நேற்று முதல்நாள் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரச்சாரம் செய்யும் போது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆர்எஸ்எஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கொண்டனர்.

Election Commission becomes a brother to BJP says Mamata

இதனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சார செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார்.

அதில், நேற்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. மோடிக்கு பின் யாரும் பிரச்சாரம் செய்ய கூடாது என்று இப்படி செய்து இருக்கிறார்கள். அதற்கு பின்பே தேர்தல் ஆணையம் பிரச்சாரத்தை தடை செய்தது.

மமதாவிடம் மோதாதீர்கள்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்.. மோடியை எச்சரிக்கும் மாயாவதி!மமதாவிடம் மோதாதீர்கள்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்.. மோடியை எச்சரிக்கும் மாயாவதி!

நான் இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை. நான் இதை சொல்லியே தீருவேன். தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்துவிட்டது. தேர்தல் ஆணையம் பாஜகவின் தம்பி போல செயல்படுகிறது.

ஒரு காலத்தில் தேர்தல் ஆணையம் இப்படி இல்லை. தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு விற்கப்பட்டுவிட்டது.

எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. ஆனால் இருக்கட்டும், எனக்கு இப்போது பயம் கிடையாது. என் மீது நடவடிக்கை எடுத்தாலும் சரி, நான் தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மைதான் என்று மமதா கூறியுள்ளார்.

English summary
I may go to jail for this remark, But have to say that, this Election Commission becomes a brother to BJP says Mamata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X