For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

27ம் தேதி தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: 58 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.

Election commission to conduct all party meet on august 27

கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த காரணத்தால் 27ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. விளம்பரங்கள், நடத்தை விதிமீறல்கள், பிரச்சாரங்களின் போது அவதூறு பேசுவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரங்கள், நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்க உள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Election commission is conducting all party meet on august 27th to discuss about the parliament election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X