For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

கர்நாடக தேர்தலில் சின்னங்களை ஒதுக்குவதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது, அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது

    பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    கர்நாடகாவில் வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெங்களூரின் காந்திநகர், ஹனூர், மற்றும் கோலார் மாவட்டம் தங்க வயல் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Election commission refused to allot double leaf symbol to AIADMK for Karnataka assembly election

    கர்நாடக தேர்தலில் சின்னங்களை ஒதுக்குவதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது, அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

    கர்நாடக தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது. சின்னம் ஒதுக்க கோரி, அதிமுகவிடமிருந்து, உரிய நேரத்தில் மனு வந்து சேரவில்லை என்பது மட்டுமின்றி, கர்நாடகாவில், அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காததற்கு காரணமாகும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்றும், கர்நாடக மாநிலத்தில், அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

    English summary
    Election commission refused to allot double leaf symbol to AIADMK for Karnataka assembly election as the party didn't got the recognition in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X