For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்விட்டரில் வீடியோ.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

    டெல்லி: தேர்தல் விதிகளை மீறியதாக நோட்டீஸ் அளிக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Election Commission sends notice to Delhi CM Aravind Kejriwal

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 3-ஆம் தேதி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கெஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    இந்த நோட்டீஸுக்கு இன்று 5 மணிக்குள் கெஜரிவால் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வீடியோவானது வாக்குகளை பெறும் நோக்கில் வெளியிடப்பட்டதாக புகாரின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Election Commission sends notice to Aravind Kejriwal for tweeting the video which violates Mode of Conduct.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X