For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் முடிவுகளை ஜோதிடர்கள் கணிக்கக் கூடாது- தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!

தேர்தல் முடிவுகளை ஜோதிடர்கள் தேர்தலுக்கு முன்பு கணிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் முடிவுகளை ஜோதிடர்கள் தேர்தலுக்கு முன்பு கணிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜோதிடர்களின் கணிப்புகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் எச்சரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அண்மையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

Election commission warns that astrologers should not predict Election result before the election

வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்போதே, சில தொலைக்காட்சிகளில் முடிவுகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிட்டன. இது குறித்து, தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புகார்களை விசாரித்த தேர்தல் ஆணையம் ஜோதிடர்கள் தேர்தலுக்கு முன்பு முடிவுகளை கணிப்பதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புறம்பானது, அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.

English summary
Election commission warns that astrologers should not predict Election result before the election. if the order is not followed severe action will be taken.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X