For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானா, மபி, சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.. டிச. 11ல் ரிசல்ட்

டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மத்திய பிரதேசம் சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு- வீடியோ

    டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    நவம்பர் 12ம் தேதி முதல் கட்ட தேர்தலை சட்டிஸ்கர் சந்திக்கிறது. நவம்பர் 20ம் தேதி 2வது கட்ட தேர்தல் நடைபெறும். நவம்பர் 28ல் மத்தியபிரதேசம் மற்றும் மிஸோரம் தேர்தல் நடைபெறும்.

    Election dates in Madhya Pradesh, Rajasthan Chhattisgarh, Mizoram states to be Announced Today

    தெலுங்கானாவுக்கு டிசம்பர் 7 தேர்தல் நடைபெறும். அதே நாளில் ராஜஸ்தானுக்கும் தேர்தல் நடைபெறும்.

    தேர்தல் அட்டவணை இதுதான்:

    18 தொகுதிகளுக்கு சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் அக்டோபர் 16ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக். 23. பரிசீலனை 24ம் தேதி. வாபஸ் பெற அக். 26 கடைசி நாளாகும். முதல்கட்ட தேர்தல் நவ. 12ல் நடைபெறும்.

    சட்டீஸ்கரில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவ. 2ல் துவங்கும். வேட்புமனு வாபஸ் பெற 5ம் தேதி கடைசி நாள். தேர்தல் நவ. 20ல் நடைபெறும்.

    மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் நவம்பர் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் டிசம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும். தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது இந்த தகவலை தெரிவித்தார்.

    இன்னும் ஆட்சிகாலம் முடிவதற்கு 9 மாதங்கள் இருந்த நிலையிலும் கூட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சட்டசபையை கலைப்பதற்கு அமைச்சரவையை கூட்டி ஆளுநருக்கு பரிந்துரை செய்தார்.

    இதை ஏற்று சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. அங்கு காபந்து முதல்வராக சந்திரசேகரராவ் செயல்பட்டு வருகிறார். எனவே தெலுங்கானாவிற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மிசோராம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. நாட்டில் தற்போது மூன்று மாநிலங்களில் தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அதில், பஞ்சாப் கர்நாடகா தவிர்த்து மிசோராமும் ஒன்று.

    கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. எனவே மிசோராமை தக்க வைப்பது காங்கிரசுக்கு பெரும் கவுரவப் பிரச்சனையாக இருக்ககும்.

    மத்திய பிரதேசத்தில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. எனவே மக்களிடம் இயல்பாக எழும் அதிர்ச்சியை காங்கிரஸ் அறுவடை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    ராஜஸ்தானிலும் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருக்கும் என்பதால் இந்த தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    [ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்!]

    English summary
    The Election Commission will today announce the dates of the assembly elections in four states, Madhya Pradesh, Rajasthan, Chhattisgarh, Mizoram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X