For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் களைகட்ட உள்ள திருமணங்கள்.. இலவச வைஃபை, பெரிய டிவி,லைவ் டெலிகாஸ்ட் .. எதுக்கு தெரியுமா.?

Google Oneindia Tamil News

விஜயவாடா: மே 23-ம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாள். இந்த பரபரப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அன்று நடைபெற உள்ள திருமண மற்றும் சுப நிகழ்வுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போவது தான் சுவாரசியமான விஷயம்.

மே 23-ம் தேதியன்று தங்கள் வீட்டு திருமண ஏற்பாடுகளை செய்துள்ள மணமகள் மற்றும் மணமகன்களின் பெற்றோர்கள், தங்கள் வீட்டு சுபநிகழ்வின் போது வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Election Fever in Andhra Pradesh .. Various arrangements in wedding halls on May 23

மேலும் சிலர் தங்களது வீட்டு நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு, இலவச வைஃபை வழங்குவதன் மூலம் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து அறிந்து கொள்ளவும் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆந்திர மாநில வேத பண்டிதர்கள் கூறுகையில், வைசாக் மற்றும் ஜேஷ்ட மாதங்கள் தெலுங்கு மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த புனித மாதங்கள். இந்த மாதங்களில் தான் தங்களது இல்ல சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்த தெலுங்கு மக்கள் விரும்புவார்கள். புதிய தொழில் துவங்குவதிலிருந்து அனைத்து நல்ல செயல்களையும் இந்த மாதங்களில் தான் செய்வர்.

கல்வெட்டுல எம்பின்னு போட்டதற்கு காரணம் இவர் தானாமே? கைது செய்தது போலீஸ்! கல்வெட்டுல எம்பின்னு போட்டதற்கு காரணம் இவர் தானாமே? கைது செய்தது போலீஸ்!

அதன்படி வைசாக மாதமான மே, 19, 23, 25, 26, 29, 30 வது நாட்களிலும் ஜேஷ்ட மாதமான ஜூன் 8, 9, 12, 13, 17, 19, 20, 22, 26 மற்றும் 27 ம் தேிகளில் பெரும்பாலான தெலுங்கு மக்கள் தங்களது இல்ல திருமண மற்றும் சுப நிகழ்வுகளை நடத்த தயாராகி வருகின்றனர்.

அதிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே23ம் தேதி நல்ல சுபமுகூர்த்த தினமாக உள்ளது எனவே அன்றைய தினம் ஏராளமான திருமணங்கள் மற்றும் வீடு குடிபோகும் சுபநிகழ்வுகள் நடைபெற உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்கள் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் சிரமப்பட கூடாது என்பதற்காக பல்வேறு வித்தியாசமான செயலில் மணமக்கள் வீட்டார் இறங்கியுள்ளனர் . திருமண மண்டபங்களில் தொலைகாட்சிகளை வைத்து வாக்கு எண்ணிக்கை குறித்த செய்திகளை நேரடியாக ஒளிபரப்பவும், இலவச நெட் கனெக்‌ஷன் ஃவைபை மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களவை தேர்தல் ஃபீவர் ஆந்திர கல்யாண மண்டபங்களையும், சுபநிகழ்வு நடைபெறும் வீடுகளையும் விட்டு வைக்க போவதில்லை என்பது வியப்பிற்குரிய அம்சமாக உள்ளது.

English summary
The day that counted votes in the Lok Sabha election on May 23rd. Interestingly, this thrill will have a huge impact on the wedding and events that will be held in Andhra Pradesh on that day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X