For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாங்கிய 'அறைகளை' விட குறைந்த சீட்களை வென்ற ஆம் ஆத்மி...!

|

டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மோடி அலையையும் இந்த கெஜ்ரிவால் அலை பாதிக்கவில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது கெஜ்ரிவால் வாங்கிய அடியை விட அவரது கட்சிக்கு குறைந்த அளவிலான சீட்களிலேயே வெற்றி கிடைத்துள்ளது சோகத்துற்குரிய சமாச்சாரம்தான்.

இக்கட்சிக்கு பஞ்சாபில் ஒரு இடத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அதேசமயம் கெஜ்ரிவால் தோல்வியுற்றுள்ளார் வாரணாசியில். இக்கட்சிக்கு அகில இந்திய அளவில் மொத்தமே 4 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

Election Results 2014: Single Seat for AAP, But Not A Complete Loss

தேர்தல் பிரசாரத்தின்போது நான்கு முறை கெஜ்ரிவாலுக்கு அடி விழுந்தது. கன்னத்தில் அடி, மை ஊற்றுவது போன்ற களேபரங்கள் நடந்தேறின. ஆனால் அதற்கெல்லாம் நிவாரணமாக ஏதாவது குறிப்பிடத்தக்கத வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாங்கிய அடி அளவுக்குக் கூட சீட் கிடைக்காதது நிச்சயம் கஷ்டமான விஷயம்தான்.

இதுதான் ஆம் ஆத்மியின் முதல் நாடாளுமன்றத் தேர்தல். டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஷீலா தீட்சித்தை வெல்ல முடிந்த கெஜ்ரிவாலால், வாரணாசியில் நரேந்திர மோடியை வீழ்த்த முடியாமல் போய் விட்டது.

அதேசமயம், பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பரவலாக 2வது இடம் கிடைத்துள்ளது.

டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் அக்கட்சி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

இத்தேர்தலில் 350க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஆம் ஆத்மி நிறுத்தியது. ஆனால் 4 இடங்களுக்கு மேல் அதற்குக் கிடைக்காமல் போவது அக்கட்சியினரை யோசிக்க வைத்துள்ளது. டெல்லி முதல்வர்

English summary
Aam Aadmi Party chief Arvind Kejriwal placed second in his first parliamentary election in Varanasi, losing to the man who is set to be India's next Prime Minister, Narendra Modi. His party won a lone seat in Punjab. But the rookie party has shown that it is not a write-off. AAP was the second party in many seats in states like Delhi and Punjab, completing the Congress' humiliation at a time the country has given a massive, clear mandate to the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X