For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதுவா போன யானைகளை வம்பிழுத்த இளைஞர்கள்.. துரத்தி சென்று மிதித்தே கொன்ற யானை.. வீடியோ

Google Oneindia Tamil News

குவாஹாட்டி: சாலையில் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு சென்ற யானைக் கூட்டத்தை கிண்டல் செய்த இளைஞர்களை ஒரு யானை அவர்களை துரத்தி சென்று ஒருவரை மிதித்து வீசிக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் நிமாலிகார்க் காட்டுப்பகுதியில் டீ எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறம் உள்ள காட்டுக்குள் 10-க்கும் மேற்பட்ட யானைகளை கொண்ட யானை கூட்டம் ஒன்று அமைதியாக கடந்தது.

1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம் 1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்

அப்போது இரு புறத்திலும் நிறைய தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் இளைஞர்கள் அந்த யானைக் கூட்டத்தை சப்தமிட்டு விரட்டிவந்தனர். சாலையில் நின்ற வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பச் செய்து வம்பிழுத்தனர்.

யானைகள் அச்சம்

யானைகள் அச்சம்

யானைகள் அனைத்தும் அச்சமடைந்து பயந்தபடியே அந்த சாலையை கடந்து சென்றன. இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட இளைஞர்கள் ஒரு துணியை காட்டி அந்த யானைகளை சீண்டினர். அப்போது கடைசியாக ஒரு யானை கோபமடைந்து வம்பிழுத்த கூட்டத்தை விரட்டி சென்றது.

சிதறி அடித்து ஓடிய இளைஞர்கள்

சிதறி அடித்து ஓடிய இளைஞர்கள்

இதனால் அங்கிருந்த இளைஞர்கள் சிதறி அடித்து ஓடினர். அப்போது பள்ளத்தில் விழுந்த இளைஞரை அதே வேகத்தில் காலால் மிதித்து கொன்றுவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது. இறந்த நபரின் பெயர் பாஸ்கர் முண்டா. இந்த நபர் பர்பிள் நிறத்தில் சர்ட் அணிந்திருந்தார்.

யானைகள் மீது சீண்டல்

யானைகள் மீது சீண்டல்

கையில் மஞ்சள் நிறத்தில் ஒரு துணியை காட்டி யானைகளை சீண்டினார். யானை துரத்தும் போது ஓடிய முண்டா ஒரு பள்ளத்தில் விழுந்த போது அவரை அந்த பள்ளத்தில் வைத்தே மிதித்தது யானை. இதையடுத்து அங்குள்ள கோலாகாட் அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வனத்துறை அதிகாரி

வனத்துறை அதிகாரி

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் வெளியிட்டுள்ளார். அவர் இந்த விஷயத்தில் நாம் யாரை குறை கூறுவது? என கேள்வி எழுப்பியுள்ளார். அமைதியாக சாலையை கடந்த யானை கூட்டத்தை வம்பிழுத்த காரணத்தால் ஒரு உயிர் பலியாகியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Elephant in Assam crushes a man after he and his gang teases herd of elephants crossing a road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X