For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழிவின் விளிம்பில் கேரள யானைகள்.. சரமாரியாக கொல்லப்படும் பரிதாபம்!

Google Oneindia Tamil News

கொல்லம்: கேரள மாநில வனப்பகுதியில் அதிக அளவில் யானைகள் கொல்லப்பட்டுவருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநில மேற்குத்தொடர்ச்சி வனப் பகுதிகளில், யானைகள் அதிக அளவில் வசிக்கின்றன.

ஆரியங்காவு முதல் ஆரம்பிக்கும் கேரளா வனப்பகுதியிலிருந்து அதன் எல்லை வரை அதிக யானைகள் உள்ளன.

யானைக் கூட்டங்களின் எண்ணிக்கை:

யானைக் கூட்டங்களின் எண்ணிக்கை:

மலப்புரம், பாலக்காடு, அச்சன்கோவில் ,தென்மலை என யானை கூட்டங்கள் அதிகம் வாழும் பகுதிகளை தேசிய அளவில் பிராணிகள் நல அமைப்புக்கள் புள்ளிவிபரங்களை கணக்கெடுத்து வைத்துள்ளன.

அதிகரிக்கும் யானைகள் இறப்பு:

அதிகரிக்கும் யானைகள் இறப்பு:

இந்நிலையில், வனவிலங்குகள் நல அமைப்பான, டாஸ்க் போர்ஸ் என்ற அமைப்பு, சமீபகாலமாக கேரளாவில் யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

உணவுப் பற்றாக்குறை காரணம்:

உணவுப் பற்றாக்குறை காரணம்:

யானைகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்களால், யானைகள் இறப்பது அதிகரித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை:

இறப்பு எண்ணிக்கை:

கேரளாவில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 12 ஆண் யானைகள், 60 பெண் யானைகள் உட்பட, 106 யானைகள் இறந்துள்ளன என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

அழிக்கும் செயலில் யானைகள்:

அழிக்கும் செயலில் யானைகள்:

யானைகளுக்கு காடுகளில் போதிய உணவுவசதிகள் இல்லாததால்தான் காடுகளை ஒட்டியுள்ள ஊர்களுக்குள்ளும்,தனியார் தோப்புகளுக்குள் புகுந்து தென்னை உள்ளிட்ட மரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Elephants count reduced due to food shortage. National animal trust released this statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X