For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவாவில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளராக முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்ஸ் அறிவிப்பு

கோவா சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கோவா சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தெற்கு கோவாவின் கன்கோலிம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.

கோவா மாநில சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. ஆகையால் அம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கோவா சட்டசபை. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மகாராஷ்டிரா கோமந்தக், கோவா விகாஷ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்தான் இதுவரை தேர்தல் களத்தில் இருந்தன.

Elvis Gomes is Goa's AAP Chief Ministerial candidate

ஆம் ஆத்மி கட்சியும் கோவா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களை தற்போது தீவிரமாக செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை கோவா மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது. தெற்கு கோவாவின் கன்கோலிம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்விஸ் கோம்ஸ் (53) சிறைத்துறையின் ஐஐியாக பணியாற்றிவர். முன்னதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் இயக்குனர், கோவா வீட்டு வசதி வாரிய தலைவர், பனாஜி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறைமுக தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார் ஓய்வு பெற்ற பின்னர் தமாக முன்வந்து ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார். தமிழகத்தின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போல். இருபது ஆண்டுகளுக்கு மேல் கோவா மக்களால் கொண்டாடப்படும் நேர்மையான அதிகாரி எல்வின் கோம்ஸ் கோவாவின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே புதுதெம்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Former Inspector General of Prisons Elvis Gomes will be the AAP's Chief Ministerial candidate in Goa, Delhi's Chief Minister Arvind Kejriwal announced on Monday. The Aam Aadmi Party leader made the declaration at a public rally here. Goa will see assembly elections early next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X