For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமான "எமர்ஜென்சி" பிரகடனப்படுத்தப்பட்ட 'கருப்பு நாள்' இன்றுதான்....

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமாக வரலாற்றின் பக்கங்களில் கருப்பு நாளாக இடம்பிடித்துக் கிடக்கும் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை பிரகடனம் இதே நாளில்தான் 41 ஆண்டுகளுக்கு முன்பு 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையாரால் பிரகடனம் செய்யப்பட்டது.

Emergency 1975: Must Know Facts

எமர்ஜென்சி தொடர்பான சில முக்கிய தகவல்கள்:

  • 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.
  • 21 மாதங்கள் அதாவது 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி வரை எமர்ஜென்சி அமலில் இருந்தது.
  • 1971 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 1975ஆம் ஆண்டு ஜூன் 12-ந் தேதியன்று இந்திரா வென்றது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டு 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
  • நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திரா பதவி விலகக் கோரி முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. இதனைத் தொடர்ந்தே எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.
  • இந்திரா காந்தியிடம் எமர்ஜென்சியை அமல்படுத்தலாம் என ஆலோசனை கூறியது மேற்கு வங்க முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ராய் (எஸ்.எஸ்.ராய்).
  • பிரதமராக இருந்த இந்திராவின் ஆலோசனைப்படி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது.
  • இந்திராவின் எமர்ஜென்சி வெறியாட்டங்களுக்கு அவரது இளைய மகன் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார்.
  • சஞ்சய்காந்தி உத்தரவால் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட நள்ளிரவில் தினசரி பத்திரிகைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது
  • இந்திய அரசியல் சாசனத்தின் 352-வது பிரிவின் கீழ் அனைத்து அதிகாரங்களையும் தம் வசமாக்கினார் இந்திரா காந்தி.
  • இந்திராவை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ்நாராயணன், சரண்சிங், ஆச்சார்ய கிருபாளினி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி என பல எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையிலடைக்கப்பட்டனர்.
  • தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. இதனால் எண்ணற்ற திமுகவினர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்தால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
  • 1977-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைய ஜனநாயகத்தின் இருண்ட காலமான எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது.
English summary
Here the some facts of Emergency which was in effect from 25 June 1975 until its withdrawal on 21 march 1977.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X