For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்ப்பு எதிரொலி.. இந்து வெஜிடேரியன் உணவை மீண்டும் பட்டியலில் சேர்த்த எமிரேட்ஸ்!

இந்து வெஜிடேரியன் உணவை எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் உணவு பட்டியலில் இருந்து நீக்கியதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்து வெஜிடேரியன் உணவை எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் உணவு பட்டியலில் இருந்து நீக்கியதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. பலத்த எதிர்ப்பை அடுத்து இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

உலகில் உள்ள முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்களில் எமிரேட்ஸ் நிறுவனமும் ஒன்று. தொடக்க காலத்தில் இந்தியாவில் இருந்தும், மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய் வள நாடுகளுக்கு செல்ல மட்டுமே இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்ல இந்த விமானத்தை பயன்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளனர். பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்வதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மதம்

மதம்

பொதுவாக உலகம் முழுக்க விமானங்களில், நிறைய விதமான உணவு பட்டியல் அளிக்கப்படுகிறது. பொதுவாக மதம் மற்றும் நாடுகளை பொருத்துதான் இந்த உணவு பட்டியல் உருவாக்கப்படும். இஸ்லாமியர், இந்து, கிருஸ்துவர்கள் என்று பல்வேறு அடிப்படையில் இந்த உணவு பட்டியல் அளிக்கப்படும். இதற்காக சர்வதேச கோட் உருவாக்கப்பட்டுள்ளது.

உணவு பட்டியல்

உணவு பட்டியல்

அதன்படி இந்து நான் -வெஜிடேரியன் மீல்ஸில் (HNML) ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் மட்டும் வழங்கப்படும். ஆனால் மாட்டுக்கறி, பன்றிக்கறி, பச்சை மாமிசம் போன்றவை வழங்கப்படாது. அதேபோல் முஸ்லிம் நான் வெஜிடேரியன் மீல்ஸில் பன்றிக்கறி வழங்கப்படாது. இதில் வெஜிடேரியன் மீல்ஸ், இந்து வெஜிடேரியன் மீல்ஸ் என்ற இரண்டு வகை இருக்கிறது. வெஜிடேரியன் மீல்ஸில் பொதுவாக உலகம் முழுக்க எல்லோரும் சாப்பிடும் வெஜிடேரியன் உணவுகள் வழங்கப்படும். ஆனால் இந்து வெஜிடேரியன் மீல்ஸில், இந்து உணவு கலாச்சாரம் படி உருவாக்கப்பட்ட வெஜிடேரியன் உணவுகள் வழங்கப்படும்.

எமிரேட்ஸ் வழக்கம்

எமிரேட்ஸ் வழக்கம்

இதில் எமிரேட்ஸ் கொஞ்சம் வித்தியாசமான வழக்கத்தை கடைபிடித்தது. அதன்படி பயண டிக்கெட் புக் செய்யும் போதே நாம் என்ன உணவு வேண்டும் என்று கூற வேண்டும். எமிரேட்ஸ் நிறுவனம் இதற்காக பிரத்யேகமாக அந்தந்த நாடுகளை சேர்ந்த சமையல் நிபுணர்களை வைத்து உணவு சமைத்து அளிக்கும். அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு பிடித்த வகையில் சாப்பிட வேண்டும் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால்தான் அந்த நிறுவனம் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

நீக்கியது

நீக்கியது

இந்த நிலையில் இரண்டு நாள் முன்பு இந்து வெஜிடேரியன் உணவை எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் உணவு பட்டியலில் இருந்து நீக்கியது. ஆனால் நீங்கியவுடன், ஸ்டார் குறியீட்டுடன் ஒரு பின்குறிப்பையும் வெளியிட்டது. அதன்படி, இந்து வெஜிட்டேரியன் மீல்ஸ் மட்டுமே நிறுத்தப்படுகிறது, மாறாக எப்போதும் போல வெஜிட்டேரியன் மீல்ஸ் வழங்கப்படும். இந்திய மக்கள் அதை குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறியது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால் இந்தியாவை சேர்ந்த வெஜிடேரியன் மட்டும் சாப்பிட கூடிய மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது முழுக்க முழுக்க இந்திய இந்துக்களுக்கு எதிரானது என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு விடாமல், எமிரேட்ஸ் நிறுவனத்தை இனி ஹிந்துக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாமாம் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

மீண்டும் கொண்டு வந்தது

மீண்டும் கொண்டு வந்தது

இதையடுத்து எமிரேட்ஸ் நிறுவனம் இந்திய இந்துக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து இருக்கிறது. தங்களது மெனுவில் தற்போது மீண்டும் இந்து வெஜிடேரியன் மீல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். உலகம் முழுக்க தங்களுக்கு பயணிகள் இருக்கிறார்கள், இந்த உணவு வேறுபாட்டால் இந்தியாவில் இருக்கும் பயணிகளை இழக்க விரும்பவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Emirates decides to continue with Hindu meals after gets fire by Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X