For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஐஎம் மாணவர்களில் 90 சதவீதம் பேர் என்ஜினியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் என்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்(ஐஐஎம்). அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, லக்னோ, இந்தூர் மற்றும் கோழிக்கோட்டில் ஐஐஎம்களில் இந்த ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களில் 83 முதல் 95 சவீதம் பேர் என்ஜினியர்கள்.

இதே போன்று உலக அளவில் புகழ்பெற்ற ஹார்வர்டு மற்றும் வார்டன் பிசினஸ் ஸ்கூல்களில் சேர்ந்துள்ள மாணவர்களில் 36 சதவீதம் பேர் என்ஜினியர்கள்.

பெங்களூர், அகமதாபாத்

பெங்களூர், அகமதாபாத்

பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் 2013-2015ம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் மொத்தம் 91.09 சதவீதம் பேர் என்ஜினியர்கள். பெங்களூர் ஐஐஎம் மாணவர்களில் 91 சதவீதம் பேர் என்ஜினியர்கள். மேலும் அகமதாபாத் ஐஐஎம்மில் சேர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் என்ஜினியர்கள் ஆவர்.

என்ஜினியர்கள் ஏன்?

என்ஜினியர்கள் ஏன்?

திறமையான மாணவர்கள் என்ஜினியரிங் படிக்க செல்கின்றனர். நன்றாக படிக்கும் மாணவ, மாணவியரால் மட்டுமே சிஏடி எனப்படும் கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. அவ்வாறு கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களால் மட்டுமே ஐஐஎம்மில் சேர்ந்து படிக்க முடியும். ஐஐஎம்மில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கொடுக்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பிசினஸ் ஸ்கூல்கள்

உலக பிசினஸ் ஸ்கூல்கள்

ஸ்பெயினில் உள்ள ஐஇஎஸ்இ பிசினஸ் ஸ்கூலில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே என்ஜினியர்கள். மேலும் வார்டன் பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்துள்ள மாணவர்களில் 25 சதவீதம் பேர் அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினியரிங், கணக்கு பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

ஐஐடி

ஐஐடி

ஐஐடிக்களில் படிக்கும் என்ஜினியர்களையே ஐஐஎம் அதிக அளவில் தேர்வு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குறைவான அளவில் என்ஜினியர்களை எடுக்கும் வகையில் 2014-2016ம் ஆண்டுக்கான பிஜிபி வகுப்புகளுக்கு புதிய சட்டத்திட்டத்தை ஐஐஎம் அகமதாபாத் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் என்ஜினியர்கள்

அதிகரிக்கும் என்ஜினியர்கள்

ஐஐஎம் லக்னோவில் கடந்த ஆண்டு 79 என்ஜினியர் அல்லாத மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 59 ஆக குறைந்துள்ளது. பெங்களூர் ஐஐஎம்மில் கடந்த ஆண்டு 42 ஆக இருந்த என்ஜினியர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 36 ஆக குறைந்துள்ளது.

என்ஜினியர்கள் தான் வருகிறார்கள்

என்ஜினியர்கள் தான் வருகிறார்கள்

ஐஐஎம்களில் சேர பெரும்பாலும் என்ஜினியர்கள் தான் விண்ணப்பிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவ, மாணவியர் என்ஜினியரிங் படிக்கவே விரும்புகிறார்களாம்.

English summary
The number of engineers who have joined the IIMs have increased this year. IIMs at Ahmedabad, Bangalore, Calcutta, Lucknow, Indore and Kozhikode had 83 per cent to 95 per cent engineers in the 2013-2015 batch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X