For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்வோம்.. தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Entry of Women into Sabarimala: Devasom board goon appeal the verdict for review

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

[சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது.. தனித்து தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா! ]

இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு திருவாங்கூர் தேவசம் போர்ட் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம். விரைவில் மனுதாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

English summary
Entry of Women into Sabarimala: Devasom board goon appeal the verdict for review.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X