For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் நிலைமையை ஆராய அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் தூதர்கள் பயணம்

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் கென்னத் ஜஸ்டர் உட்பட 16 நாடுகளின் தூதர்கள் ஜம்மு காஷ்மீர் நிலைமையை ஆராய 2 நாட்கள் பயணமாக ஶ்ரீநகர் சென்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Envoys from 16 nations visit Jammu Kashmir

மேலும் உச்சநீதிமன்ற அனுமதி பெற்றே ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டிய நிலை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உருவானது. சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவுக்கான 16 நாடுகளின் தூதர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று ஶ்ரீநகர் சென்றடைந்தனர். ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் அங்கு செல்லும் முதல் அதிகாரப்பூர்வமான வெளிநாட்டு தூதர்கள் குழு இது.

Recommended Video

    ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம் - வீடியோ

    வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கில் விசாரணை- உச்சநீதிமன்றம்வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கில் விசாரணை- உச்சநீதிமன்றம்

    ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு செல்லும் இக்குழுவினர் அங்கு தங்குகின்றனர். பின்னர் லெப்டினன்ட் ஆளுநர் ஜிசி முர்முவை இக்குழு சந்தித்து பேசுகிறது.'

    Envoys from 16 nations visit Jammu Kashmir

    ஶ்ரீநகர் சென்றுள்ள இக்குழுவில் வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவுகள், தென் கொரியா, மொராக்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளின் தூதர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்கள் மற்றொரு நாளில் பயணம் செய்வதாக கூறியுள்ளனர்.

    மேலும் அப்போது சிறையில் உள்ள மூன்று முன்னாள் முதல்வர்களை சந்திக்க முடியும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்,

    English summary
    A delegation of 16 foreign envoys reached Srinagar today to take a stalk of situation on the ground in Kashmir valley.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X